Today astrology: சூரியப் பெயர்ச்சி பலன்கள்...இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை...இன்றைய ராசி பலன்!

By Anu Kan  |  First Published Mar 25, 2022, 5:00 AM IST

Today astrology: இந்துக்கள் சூரியனை முழு முதற் கடவுளாக எண்ணி, தனது காரியங்களை மேற்கொள்வார்கள். ஜோதிடத்தின் படி, சூரியன் அனைத்து கிரகங்களின் ராஜா என்று  அழைக்கப்படுகிறார்.


இந்துக்கள் சூரியனை முழு முதற் கடவுளாக எண்ணி, தனது காரியங்களை மேற்கொள்வார்கள். ஜோதிடத்தின் படி, சூரியன் அனைத்து கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும். 

இந்த நேரத்தில் சூரிய பகவான் மீன ராசியில் இருக்கிறார். மீனத்தில் பிரவேசித்துள்ள ஏப்ரல் 13 வரை தங்குவார். இதனால், சூர்ய தேவன் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறார்.  அந்த 6 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

undefined

ரிஷபம்:
 
ரிஷப ராசிக்காரர்களின் தினசரி வருமானம் கூடும். பணியில் உற்சாகம் உண்டாகும்.மேலும், வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஏப்ரல் மாதம் முழுவதும் பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். வியாபாரிகள் சிறப்பான பொருளாதார பலன்களைப் பெறுவார்கள்.

மேஷம்:

ஆன்மீக நடவடிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். தாய் ஆதரவாக இருப்பார். தாயாரிடம் இருந்து பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. அறிவார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். வேலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது குடும்பத்தினர் ஆன்மீக வழிபாட்டு இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.

மிதுனம்:

சூரியன் மற்றும் புதனின் அருளால் மிதுன ராசிக்காரர்கள் அதிக பலன் அடைய வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வருமானமும் கூடும். இந்த காலத்தில் தவிர திடீர் பண ஆதாயம் உண்டாகும். ஆடை போன்ற பரிசுப்பொருட்கள் வாங்க வாய்ப்பு உண்டு. 

கன்னி:

திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். பிறருடன் கூட்டு சேர்ந்து செய்யும் வியாபாரத்தில் இருந்து பலமான பொருளாதார பலன்கள் கிடைக்கும். வேலையை மாற்றம் காரணமாக வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். 

தனுசு:

பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். வாழ்வில், மகிழ்ச்சி பொங்கும். நீங்கள் வேறு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், வேலை மாற்றம் மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கும். வருமானம் அதிகரிக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தாரின் ஆதரவும் இருக்கும்.  சுற்றுலா செல்லும் வாய்ப்பு அமையும்.

கும்பம்:

பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள், சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும்.வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. திருமண காரியங்கள் கைகூடும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

மேலும் படிக்க....Today astrology: 18 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசிக்குள் நுழையும் ராகு...யாருக்கு ஆபத்து? யாருக்கு அதிர்ஷ்டம்.!


 

click me!