Today astrology: சனி பகவானின் அருளை அலேக்காக தூக்கும் 4 ராசிக்காரர்கள்...இன்றைய ராசி பலம்..!

By Anu Kan  |  First Published Mar 8, 2022, 6:20 AM IST

Today astrology: சனிபகவானின் மாற்றத்தால், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம்...வீடு தேடி வரும் அவை யார் யாருக்கு என்பதை கீழே தெரிந்து கொள்வோம்.


சனி நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். மக்களுக்கு அவரவர் செய்கைக்கேற்ப அவர் பலன்களை வழங்குகிறார். ஜோதிடத்தின் பார்வையில் சனியின் பெயர்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சனி பகவான் எப்போது ராசியை மாற்றுகிறாரோ, அப்போது சில ராசியில் சனி தசை தொடங்கும் அதே வேளையில் சில ராசிகளில் நன்மை பயக்கும்.

அதன்படி, சனி ஒரு வருடத்திற்கு பிறகு ஏப்ரல் 29 ஆம் தேதி, மகர ராசிக்கான தனது பயணத்தை தொடங்கவுள்ளார். இந்த நேரத்தில், சனி பகவான் கும்பத்தில் தனது சொந்த ராசியில் நுழைவார். இந்த பயணம், சில ராசிகளில் ஏழரை நாட்டு சனி, சனி தசை துவங்கும். அதேசமயம் இந்த காலத்தில் ஏழரை நாட்டு சனி, சனி தசை சில ராசிகளில் முடிவடையும்.

Tap to resize

Latest Videos

undefined

 அப்படியாக, சனி பகவான், இந்த 3 ராசிக்காரர்களிடம் எப்போதும் கருணையுடன் இருப்பார். இதனால், அதிர்ஷ்டம் அவர்களை விட்டு விலகாது. எந்த வேலை செய்தாலும் எளிதில் வெற்றி பெறுவார்கள். அவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பதுடன் பெயரையும் சம்பாதிப்பார்கள் . இதற்குப் பின்னால் சனியின் அருள் எப்போதும் இருப்பதே காரணம். மேலும், சனியின் இந்த ராசி மாற்றம் ஜோதிடத்தின் பார்வையிலும் சிறப்பு வாய்ந்தது.

யார் யார் அந்த அதிர்ஷ்ட சாலிகள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

துலாம்: 

சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசியாக துலாம் கருதப்படுகிறது. இதனாலேயே துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் எப்போதும் உண்டு. அவர்கள் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். பொதுவாக அவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு இலக்கையும் அடைவார்கள். இவர்கள் சனி சாலிசாவை பாராயணம் செய்தால், சனியின் அருள் என்றென்றும்  கிடைக்கும்.

கும்பம்: 

கும்ப ராசிக்கு அதிபதி சனி இந்த ராசிக்காரர்களிடம் எப்போதும் கருணை காட்டுபவர். சனியின் அருளால், இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள், நல்ல தலைவர்கள், அநீதிக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள். இவர்கள் நல்ல தலைவர்களாக இருந்து நிறைய புகழும் பெயரும் சம்பாதிப்பார்கள்.

மேஷம்: 

இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றம் சாதகமாக அமையும். உங்கள் அதிர்ஷ்டத்திற்கான கதவு திறக்கும். முன்னேற்றத்திற்கான சிறப்பு வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் நற்பெயர் உயரும். பதவி உயர்வுடன் வருமானமும் கூடும்.

மகரம்: 

மகர ராசிக்கு சொந்தக்காரரும் சனி கிரகம்தான். சனியின் அருளால் இவர்கள் கடினமாக உழைத்து நினைத்ததை சாதிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் சனியின் அருளால் வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் பெறுவார்கள், அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சிறந்த முன்னேற்றத்தை அடைகிறார்கள்.

மேலும் படிக்க...Women's Day 2022: ராஜா யோகம் பெரும் 6 ராசி பெண்கள் இவர்கள்தான்... இன்று மாக ராணிகளாக சுற்றி திரிவார்கள்..!

click me!