Today astrology: சனியின் பிடியில் சுக்கிரன்...தலைவிதி மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 7 ராசிகள்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 28, 2022, 06:07 AM ISTUpdated : Feb 28, 2022, 06:46 AM IST
Today astrology: சனியின் பிடியில் சுக்கிரன்...தலைவிதி மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 7 ராசிகள்..!!

சுருக்கம்

Today astrology: ஜோதிடத்தில், சுக்கிரன் செல்வத்தின் காரணியாகவும், சுப கிரகமாகவும் கருதப்படுகிறது. சுக்கிரன் பிப்ரவரி 28 ஆம் தேதி அதாவது இன்று மகர ராசியில் நுழைகிறார். 

ஜோதிடத்தில், சுக்கிரன் செல்வத்தின் காரணியாகவும், சுப கிரகமாகவும் கருதப்படுகிறது. சுக்கிரன் பிப்ரவரி 28 ஆம் தேதி அதாவது இன்று மகர ராசியில் நுழைகிறார். ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சுக்கிரன் செல்வத்தின் காரணியாகவும், சுப கிரகமாகவும் கருதப்படுகிறது. சுக்கிரன் பிப்ரவரி 28 இன்று சனியின் ராசியான மகர ராசியில் நுழைகிறார். 

மகர ராசியில் நுழைந்துள்ள சுக்கிரன் மார்ச் 31 வரை, இந்த ராசியில் இருப்பார். அவருடைய இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையே நட்பு உணர்வு உண்டாகும். சுக்கிரனின் இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைப்பதோடு பண பலன்களும் கிடைக்கப் போகின்றன. குறிப்பாக, பல ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும். மகிழ்ச்சி, இன்பம், புகழ், கலை, திறமை, அழகு, காதல், காதல் என அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறப் போகிறார்கள்.அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சிம்மம்: 

சுக்கிரன் சஞ்சாரத்தால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். மேலும், வியாபாரத்தில் பண பலன்கள் உண்டாகும். இது தவிர, போக்குவரத்து முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.

மேஷம்:

சுக்கிரனின் ராசி மாற்றம் மேஷ ராசியினருக்கு சாதகமாக அமையும். இந்த சமயத்தில் சிறப்பான பண ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரம், வேலை மற்றும் பொருளாதாரம் வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கையில் முழு மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். இருப்பினும், ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

கன்னி: 

சுக்கிரனின் சஞ்சாரம் எல்லா வேலைகளிலும் வெற்றியைத் தரும். பயணத்தின் போது அதிர்ஷ்டம் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். மேலும் உத்தியோகத்தில் செய்யும் பணி பாராட்டப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்: 

இந்த சுக்கிரனின் சஞ்சாரம் வேலை மற்றும் வியாபாரத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும். திடீர் பண ஆதாயம் கூடும். குடும்பத்தில் மரியாதை இருக்கும். திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள். தினசரி வருமானம் கூடும். 

மகரம்: 

வியாபாரத்தில் நிதிநிலை வலுவாக இருக்கும். தனியார் வேலை செய்பவர்களுக்கு பண ஆதாயம் உண்டு. குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களால் நிதி ஆதாயம் கிடைக்கும். கௌரவம் உயரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி பரிவர்த்தனை மாற்றம் சாதகமாக அமையும். இந்த நேரத்தில் செய்யும் எந்த ஒரு வேலையும் நல்ல பலனைத் தரும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வியாபாரத்தில் பண ஆதாயம் உண்டாகும். தினசரி வருமானம் அதிகரிக்கும்.

மீனம்: 

சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் போது வேலையில் வெற்றி உண்டாகும். இந்த பெயர்ச்சி வேலை, தொழில் செய்வோருக்கு சாதகமாக இருக்கும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

மேலும் படிக்க...Maha shivaratri: மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் சதுரகிரிக்கு செல்ல அனுமதி..! பக்தர்கள் குஷி!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்