
சனிபகவானின் மாற்றத்தால், சில ராசிகளுக்கு சாதகம், சில ராசிகளுக்கு பாதகம் இருக்கும் அவை யார் யாருக்கு என்பதை கீழே தெரிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தில் சனி கிரகத்தின் இயக்கம், அதன் சஞ்சாரம், உதயம், அஸ்தமனம் ஆகியவை மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஏனெனில் சனி பகவானால் நமது வாழ்வில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன. சனி நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். மக்களுக்கு அவரவர் செய்கைக்கேற்ப அவர் பலன்களை வழங்குகிறார். ஜோதிடத்தின் பார்வையில் சனியின் பெயர்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சனி பகவான் எப்போது ராசியை மாற்றுகிறாரோ, அப்போது சில ராசியில் சனி தசை தொடங்கும் அதே வேளையில் சில ராசிகளில் நன்மை பயக்கும்.
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 29 அன்று, சனியின் ராசியில் மாற்றம் ஏற்படும். இந்த நேரத்தில், சனி பகவான் கும்பத்தில் தனது சொந்த ராசியில் நுழைவார். இந்த சனிப்பெயர்ச்சியால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும். அதிஷ்டம் வீடு தேடி வரும்.மேலும், சனியின் இந்த ராசி மாற்றம் ஜோதிடத்தின் பார்வையிலும் சிறப்பு வாய்ந்தது. சனியின் இந்த சஞ்சாரத்தால் கும்ப ராசிக்காரர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள், ஏனென்றால் இந்த ராசியில் எழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கும். எழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் மிகவும் வேதனையாக கருதப்படுகிறது. சனியின் இந்த இயக்கத்தால் குறிப்பிட்ட மாற்றங்களைக் காணவுள்ள ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி தசை இந்த ராசிகளில் தொடங்கும் ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசியில் சனி பெயர்ந்தவுடன் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி சதை ஆரம்பமாகும். அதேசமயம் மேஷம், ரிஷபம், சிம்மம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள் சனி தசையின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்.
மேஷம்:
இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றம் சாதகமாக அமையும். உங்கள் அதிர்ஷ்டத்திற்கான கதவு திறக்கும். முன்னேற்றத்திற்கான சிறப்பு வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் நற்பெயர் உயரும். பதவி உயர்வுடன் வருமானமும் கூடும்.
ரிஷபம்:
இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. படிப்பு முடித்து புதிதாக வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். இந்த காலம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும்.
சிம்மம்:
வேலை மாற்றத்தை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தவர்களுக்கு இது சாதகமான நேரம். இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். பணத்தை சேமிக்கவும் திட்டமிடுவீர்கள். முதலீட்டில் லாபம் பெறலாம். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். பயணங்களால் நல்ல வருமானம் பெறுவீர்கள். அபரிமிதமான செல்வம் பெருகும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்திலும் அதிக பணம் ஈட்ட நல்ல நேரம் இது. அரசு வேலை செய்பவர்களுக்கும் சாதகமான காலமாக இது இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.