
பிரபல யூடியூப்பர் மதன் கெளரி, கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தனது காதலியை கரம் பிடித்துள்ளார். தனது திருமண வீடியோவின் ப்ரோமோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏகப்பட்ட யூட்யூப் சேனல்கள் இருக்கின்றன.இருப்பினும்,சில சேனல்கள் மட்டுமே ஹிட் அடித்து வருகின்றனர். அந்த வகையில்,யூடியூப் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் மதன் கௌரி. ஆரம்பத்தில் விக்கிப்பீடியா தகவல்களை அப்படியே வாசிப்பதாக பலரால் விமர்சிக்கப்பட்டாலும் தற்போது பல தடைகளை தாண்டி முன்னேறி கொண்டிருக்கிறார்.
மதன் கௌரி, யாரும் அறிந்திராத பல வெளிநாட்டு, உள்நாட்டு சுவாரஸ்யமான தகவல்களை விரிவாக பேசி வீடியோவாக வெளியிடுபவர். இந்த சேனல் அவர் காதல் தோல்வியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது என அவரே சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் தனது நீண்ட நாள் காதலியான நித்யா என்ற பெண்ணை தற்போது கரம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், மதன் கௌரி தனது திருமண செய்தியை தன் யூட்யூப் சேனலிலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஜனவரி மாதத்தில் பகிர்ந்தார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, “எனது திருமண செய்தியை வீட்டில் தெரிவிக்கும்போது எப்படி பதற்றமாக இருந்ததோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறது. மதுரையில் நான் படிக்கும்போது நித்யா என்ற பெண் குறித்து என் நண்பர்கள் கூறுவார்கள். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். நேர்ல பேசினதில்ல, முதன்முதலா ஃபேஸ்புக்ல தான் பேசினோம். நண்பர்களானோம். ரெண்டு பேருக்குமே பிடிச்சு போச்சு. பள்ளி முடிஞ்சும் எங்க நட்பு தொடர்ந்துச்சு. பிறகு இருவரின் நட்பு காதலாச்சு. இப்போது திருமணம் ஆகப்போகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சமூக வலைதளங்களில் பழகி காதலர்களாகி பிரிந்துவிட்டு மீண்டும் சேர்ந்திருக்கிறோம். இது தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றன. நாங்க ரெண்டு பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவங்க, ஆனாலும் எங்க வீட்ல எந்த எதிர்ப்பும் சொல்லாம எங்க காதல ஏத்துக்கிட்டாங்க. எங்க பெற்றோர்கள் மாதிரியே எல்லாரும் சாதி, மதம் பார்க்காம காதலர்கள ஏத்துக்கணும்.’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ள போகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.
இந்நிலையில்,தனது திருமண வீடியோவை வெளியிடுவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்த படியே, நேற்று அதற்கு ப்ரோமோவை இன்ஸ்டாவில் பதிந்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு தனது திருமண வீடியோவை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.