மேஷம் முதல் மீனம் வரை.. உங்களுக்கு நேரம் எப்படி உள்ளது தெரியுமா..?

Published : Oct 22, 2019, 12:54 PM ISTUpdated : Oct 22, 2019, 05:35 PM IST
மேஷம் முதல் மீனம் வரை.. உங்களுக்கு நேரம் எப்படி உள்ளது தெரியுமா..?

சுருக்கம்

உங்களுக்கு நேரம் எப்படி உள்ளது தெரியுமா..?

மேஷ ராசி நேயர்களே...!

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்காலம் குறித்து யோசனை செய்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவது குறித்து முயற்சி மேற்கொள்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சில விஷயங்களை பற்றி முடிவு செய்து விரைவாக செய்து முடிப்பீர்கள். பேச்சில் தடுமாற்றம் நீங்கும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

குடும்பத்தின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். அடகு வைத்திருந்த சில நகைகளை மீட்க முடிவு எடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து அவருடன் பேசி சில விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

அனாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் உத்தரவாதம் தர வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வெளியே செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி நேயர்களே...!

எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். சொத்து வாங்குவது குறித்து அலட்சியம் காட்டவேண்டாம். வேலை சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வீண் செலவுகள் அவ்வப்போது ஏற்படும். எனவே பார்த்து செலவு செய்வது மிகவும் நல்லது.

கன்னி ராசி நேயர்களே...!

தொட்ட காரியங்கள் துலங்கும். சில முடிவுகளை எடுக்க நேரிடும். எதிர்பாராத வகையில் பணவரவு உங்கள் கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சந்தோஷமாக இருப்பீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

 உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்க செய்யும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பண வரவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேச முயற்சி செய்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரிக்கு வேலை கிடைக்கும். தாய் வழி உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வீட்டுமனை வாங்குவது குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

முன்கோபம் அடிக்கடி வர வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும். சொத்து வாங்குவது விற்பது குறித்து பலமுறை யோசிப்பது நல்லது. சகோதரர்கள் வழியில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மகர ராசி நேயர்களே...!

தேங்கிக் கிடந்த வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்பு உங்களுக்கு கிடைக்கும். தோற்றப் பொலிவு அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மீனராசி நேயர்களே...!

கடன் கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை அமைதி நிலவும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Star Fruit Benefits : இந்த ஸ்டார் பழத்தை பாத்தா உடனே வாங்கி சாப்பிடுங்க... கோடி நன்மைகள் கிடைக்கும்
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!