தாம்பத்ய வாழ்க்கைக்கு சக்தி கொடுக்கும் சூப்பர் ஜூஸ் ..!

By ezhil mozhiFirst Published Oct 21, 2019, 7:19 PM IST
Highlights

ஆலிவேரா ஜூஸ் எடுத்துக் கொள்ளும் போது, அது உடலில் செக்ஸ் ஹார்மோன்களை நன்கு சுரக்க செய்கிறது. 

தாம்பத்ய வாழ்க்கைக்கு சக்தி கொடுக்கும் சூப்பர் ஜூஸ் ..!

தாம்பத்ய வாழ்க்கையில் இன்றளவும் திருப்தி இல்லை என்று சிலர் புலம்புவதை கேட்க முடியும். இதற்காக சிலர் ஆன்லைனில் மருத்துவரிடம் சில பல கேள்விகளை எழுப்பி அது குறித்த சந்தேகத்தையும் கேட்டுக்கொள்வார்கள். பின்னர் தேவை என்றால் சிகிச்சை கூட எடுத்துக்கொள்கிறார்கள். இவை அனைத்தும் தன் துணைக்கு கூட தெரியப்படுத்தாத கூச்ச சுபாவம் கொண்ட ஆண்கள் அதிகம் என்றே கூறலாம்.

அதே நேரத்தில்,ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு உடம்பை  நல்ல முறையில் பேணி காத்தாலே போதுமானது. எந்த பாதிப்பும் இல்லாமல் தாம்பத்ய வாழ்க்கையிலும் சிறப்பாக இருக்க முடியும் 

இதற்காகவே சில ஜூஸ் வகைகள் உள்ளது. அதன் படி...

ஆலிவ்வேரா ஜூஸ் 

ஆலிவேரா ஜூஸ் எடுத்துக் கொள்ளும் போது, அது உடலில் செக்ஸ் ஹார்மோன்களை நன்கு சுரக்க  செய்கிறது. இதனால் தாம்பத்யத்தில் ஈடுபடும் போது அதிக நேரம் செலவழிக்க முடியும். அது மட்டுமில்லாமல் உடலின் குளிர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான ஒரு ஜூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் பொதுவாகவே ரத்த ஓட்டத்திற்கு மிகவும் சிறந்தது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது  ஆணுருப்புக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்கும். எனவே இதன் மூலமும் தாம்பத்ய உறவில் திருப்தி இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதய நோய் வருவது தடுக்கப்படும்

பால் 

முதலிரவில் பொதுவாகவே புதுமண தம்பதிகளை பால் அருந்த சொல்வார்கள். பாலில் பொதுவாகவே அதிக சத்துக்கள் உள்ளது. அது மட்டுமில்லமல் பாலில் இருந்து கிடைக்க கூடிய சத்துக்கள் நம் உடலில் அதிக நேரம் தங்கி தொடர்ந்து எனர்ஜியை கொடுக்கும். தாம்பத்யமும் சிறக்கும் இதன் காரணமாக தான்  முதலிரவில் மணப்பெண்ணுக்கு பால் கொடுத்து அனுப்புவார்கள்.

வாழைப்பழம் ஷேக்

வாழைப்பழம் மில்க் ஷேக் தினமும் அருந்தி வர உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் தாம்தய  உறவின் போது அதிக எனர்ஜியும் ஸ்டாமினாவும் கொடுக்கும் 

தர்பூசணி ஜூஸ்

தர்பூசனி ஜூஸ் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடு உண்டு செய்யும். இந்த நைட்ரிக் ஆக்சைடு நம் உடலில் ரத்த சுழற்சி சீராக அமைய பெரிதும் உதவும். தாம்பத்ய உறவின் போது இந்த ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேற்குறிப்பிட்ட உள்ள இந்த பழச்சாற்றை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால், உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். தாம்பத்ய வாழ்க்கையிலும் மிக சிறப்பாக செயல்படலாம்..! 
 

click me!