விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேர்ந்த நாடு என்ற கிராமத்தில் வசிக்கும் செல்வம் என்பவர், தன் பிள்ளைகளின் காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்துள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்: பழிக்கு பழி வாங்கிய தேனீக்கள்..! காதணி விழாவில் கதி கலங்கிய உறவினர்கள்..!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேர்ந்த நாடு என்ற கிராமத்தில் வசிக்கும் செல்வம் என்பவர், தன் பிள்ளைகளின் காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்துள்ளார்.
இந்த நிலையில், குலதெய்வ கோவிலில் வழிபட சென்றபோது தேனீக்கள் காட்டியதில் விழாவிற்கு வந்தவர்கள் செய்வதறியாது பதறி அங்கும் இங்குமாக ஓடி அலைந்துள்ளனர்.
குல தெய்வ கோவிலுக்கு அருகாமையில் இருந்த மாமரத்தில் மாங்காய் அடிக்க, விழாவிற்கு வந்த சிறுவர்கள் கல் வீசியதில் மரத்திலிருந்த தேனீக்கள் கொட்டியதால் மயக்கமடைந்துள்ளனர். மயங்கி விழுந்த 20க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேர்ந்த நாடு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் தனது மகன்களுக்கு காதணி விழா நடத்தியபோது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பத்தால், நிகழ்ச்சிக்கு தடபுடலாக வந்த உறவினர்கள் தற்போது மருத்துவமனையில் மயக்கத்தில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.