Home remedy recipes: சளி, இருமலுக்கு நம் தமிழர்களின் வீட்டு வைத்திய குறிப்புகள்...? டீ முதல் டிகாஷன் வரை...!

By anu KanFirst Published Jan 27, 2022, 11:25 AM IST
Highlights

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய்களிடமிருந்து தற்காத்து கொள்ள குளிர்காலத்தில் சில பானங்களை குடிப்பது சிறந்தது.

உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, குளிர்காலத்தில் ஒருவர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், குளிர்காலங்களில் பெரும்பாலும் பல நோய்த்தொற்றுகள் மற்றும் வியாதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். எனவே, உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய்களிடமிருந்து தற்காத்து கொள்ள குளிர்காலத்தில் சில பானங்களை குடிப்பது சிறந்தது.

அதுமட்டுமின்றி,காரனோ ஓமைக்ரான் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவ தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலைகளில், இருந்து ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள நோய் எதிர்ப்பை சக்தியை அதிகரிப்பது அவசியமான ஒன்றாகும். எனவே, ஓமைக்ரான் மற்றும் குளிர் கால பிரச்சனைகளை எதிர்கொள்ள  நம் தமிழர்களின் ஆரோக்கியமான வீட்டு வைத்திய பானங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 பால் மற்றும் மஞ்சள்:

சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால். 

மசாலா டீ : 

மசாலா டீ நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த பானம் ஆகும். இதில், கிராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி, ஜாதிக்காய், துளசி இலைகள் போன்ற மிதமான மசாலாப் பொருட்களின் கலவையில் தயாரிக்கப்படும் இந்த தேநீர், சளி மற்றும் இருமல் முதல் மூச்சுக்குழாய் அழற்சி வரை அனைத்தையும் சரி செய்திட  உதவக்கூடும். மேலும், துளசியில் உள்ள நோயெதிர்ப்பு பண்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

ரசம்:

தமிழர்களின் பாரம்பரிய பானமான ரசம், பூண்டு, ஜீரகம், மிளகு, புளி மற்றும் காய்கறிகளின் ஒரு கலவையாகும், இதில் கடுகு, கறிவேப்பிலையையும் சேர்க்கலாம். குளிர்காலத்திற்கு மிகவும் உகந்த மற்றும் விரும்பத்தக்க இந்த பானத்தில் பல்வேறு மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுவதால் இதுதொண்டைப்புண், காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.


 ஹல்டி தூத்:

ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், ஆன்டி இன்ஃப்ளேமேட்டரி பண்புகள் நிரம்பிய ஹல்டி தூத் தாய்மார்களுக்கு மிகவும் பிடித்த ஒரு வீட்டு வைத்தியம் ஆகும். இது உடல் வலியை குணப்படுத்தும் அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தவிர இது தொண்டை புண், சளி இருமல், காய்ச்சல், வைரஸ் தாக்கம் போன்ற பாதிப்புகளையும் சரி செய்யும்.

 கஹ்வா:

க்ரீன் டீ இலைகள், குங்குமப்பூ, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் உலர் பழங்கள், கிராம்பு ஆகியவைகளை உள்ளடக்கிய இந்த தேனீர் (கஹ்வா) ஆனது உடலை சூடாக வைத்து இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது.

மல்லெட் ஒயின்:

பிரபலமான கிறிஸ்துமஸ் பானம் தான், மல்லெட் ஒயின். இது ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, ஸ்டார் அனிஸ், உலர்ந்த ஆரஞ்சு போன்ற மசாலாப் பொருட்களுடன் ஒயினை கலந்து தயாரிக்கப்படுகிறது. இது சூடாகவும், குளிராகவும் பரிமாறப்படுகிறது.

கருமிளகு டீ

கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்.  ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன்  தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும்.  15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம். 

எனவே, இனிமே சளி இருமல் வந்தால் மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் சளியும் இருமலும் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.


 

click me!