Healthy period: மாதவிடாய் காலத்தில் வயிறு ரொம்ப வலிக்குதா..? சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்...

By anu KanFirst Published Jan 27, 2022, 1:58 PM IST
Highlights

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கும், மனமகிழ்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணமாகும்.

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கும், மனமகிழ்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணமாகும். இருப்பினும், இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையிடம், ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள், கருவுறாமை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை இயல்பாகி உள்ளது. மாதவிடாய் உடலை மட்டுமல்லாமல், மன நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு படபடப்பு, கோபமான மனநிலை, எரிச்சல், பதட்டம் ஆகியவை ஏற்படும்.

ஒரு பொதுவான மாதவிடாய் சுழற்சிகாலம் என்பது 21 முதல் 35 நாட்கள் வரை என கருதப்படுகிறது. அப்படியான, வழக்கமான மாதவிடாயின் சுழற்சியின்போது, ஒரு பெண்ணின் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் சுத்தம் செய்யப்படுவதால் உடல் ஆரோக்கியமாகி புத்துயிர் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு முறையான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். 

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சமாளிக்க மிகவும் பயனுள்ள வழி என்னவென்றால், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், உடல் எடை குறைத்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆகியவைதான். எனவே, இந்த  நாட்களில் நீங்கள் அதிகப்படியான ஜன்க் உணவுகளை சாப்பிட்டால் அதன் விளைவு உடலில் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே, எந்த உணவுகளை சாப்பிடலாம் மற்றும் அதிகமாக சாப்பிடக் கூடாது என்ற எல்லையை பெண்கள் உணர வேண்டும். அந்த வகையில், மாதவிடாய் அல்லது அதன் சுழற்சி காலங்களில் சாப்பிட மற்றம் சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து முறையாக பின்பற்றினால் நல்லது.

மாதவிடாய் காலத்தில் சாப்பிடக்கூடிய உணவுகள்:

 கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது செரோடொனின் என்ற மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அளவை அதிகரித்து, மன நல மாற்றங்களை சரி செய்யும். 

அரிசி சாதம், தானியங்களால் செய்யப்பட்ட உணவு, மக்கா சோளம், முட்டை, முந்திரி, பாதம், பால் காய்கறிகள் சேர்க்கப்பட்ட பொரி, பயறு வகைகள் ஆகியவை ஆரோக்கியமான உணவுகள். அதேபோன்று, நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் கீரைகளை சாப்பிடலாம். 

மாதவிடாய் காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

ஹோட்டல் உணவுகள். ஜங்க உணவுகள். 

ரசாயனம் அல்லது சுவையூட்டி சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகள்

எண்ணெயில் பொரித்த உணவுகள், சிக்கன், அதிக காரமான உணவுகள். எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிக அளவு எடுத்து கொள்ளும் போது உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், ஸ்வீட், கேக், ஐஸ்கீரிம் பானங்கள், இனிப்புகள். இவற்றை, நீங்கள் முழுவதுமாக தவிர்க்க முடியவில்லை என்றாலும், குறைவான அளவில் உண்ண வேண்டும்.

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்குப் போதுமான அளவு ஓய்வு எடுப்பதும் முக்கியம். எனவே, உங்கள் மாதவிடாய் சுழற்சியின்போது, உடல் கழிவுகளின் இயக்கம் கீழ்நோக்கிய திசையில் இருப்பதால், அதிகப்படியான வேலை, பேசுவது, சிந்தனை, செக்ஸ் அல்லது எந்தவொரு உடல் செயல்பாடுகளும் மாதவிடாய் சுழற்சியின் இயற்கையான ஓட்டத்தைத் தடுக்கலாம். இதுபோன்ற செயல்களுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதாலும், மாதவிடாய் நாட்களில் உங்கள் உடலுக்கு அதிக ஓய்வு தேவை என்பதாலும், இவற்றை தவிர்ப்பது நல்லது.

இதை தவிர்த்து, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது. கடினமாக வேலையை செய்யாமல் இருப்பது போன்றவையாகும். 

click me!