Tight bras: கட்டுடல் மேனியை காட்டுவதற்கு...பிராவை டைட்டாக அணிகிறீர்களா..? காத்திருக்கும் ஆபத்துகள்...

Anija Kannan   | Asianet News
Published : Jan 27, 2022, 12:33 PM IST
Tight bras: கட்டுடல் மேனியை காட்டுவதற்கு...பிராவை டைட்டாக அணிகிறீர்களா..? காத்திருக்கும் ஆபத்துகள்...

சுருக்கம்

பெண்கள் பொருத்தமில்லாத இறுக்கமாக உள்ளாடைகளை அணிந்தால் அது பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும். 

இன்றைய நவீன உலகில் ''பேஷனாக'' உடை அணிவது மக்களால் விரும்பப்படுவதால், உள்ளாடைகள் பல்வேறு மாறுதல்களை உருவாக்கி வருகிறது. உள்ளாடைகள் என்பது அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, ஆரோக்கியம் சார்ந்தும் அமையும். பெண்களைப் பொறுத்தவரை மார்பக அளவு மற்றும் வடிவத்துக்கு ஏற்ற உள்ளாடைகளை அணிவது நல்லது. இதற்கு மாறாக நமது தோற்றம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இறுக்கமான, பொருத்தமில்லாத உள்ளாடைகளை அணிந்தால் அது பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதே போன்று எல்லா வித ஆடைகளுக்கும் ஒரே வகையான உள்ளாடைகளை பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு வகையான உடைக்கும் இது மாறுபடும்.

 நீங்கள் அணியும் பிரா இறுக்கமாக இருக்கும் பட்சத்தில் அவை ஃபோலிகுலிடிஸ், டெர்மடிடிஸ், சொறி மற்றும் படை நோய் உள்ளிட்ட தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

உடல் பருமனை மறைப்பதற்காக ஸ்லிம் பிட் உள்ளாடை:

உங்களின் உடல் பருமனை மறைப்பதற்காக ஸ்லிம் பிட் போன்ற இறுக்கமான உடைகளை அணியும் பழக்கம் உடையவரா நீங்கள்? அப்படி என்றால் இதை இப்போதே விட்டுவிடுங்கள். பொதுவாக இறுக்கமான உடைகள் உங்கள் உடலுக்கு அசௌகரியத்தை தரக்கூடியவை. மேலும் உங்களுக்கு நல்ல உணர்வை தராது. மற்றவர்களின் பார்வையில் நீங்கள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக இதை செய்ய வேண்டாம். இவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றனர். 

தொடர்ந்து சரிசெய்வது:

இறுக்கமான பிராவை அணிகையில் உங்களை அறியாமலேயே பிராவின் பட்டைகளை தொடர்ந்து சரிசெய்வீர்கள்.

அமில ரிஃப்ளக்ஸ் உருவாகுதல்:

இறுக்கமான பிரா அணிவது மார்பக பகுதிக்கு கீழே கடுமையான வலியை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் இறுக்கம் ஏற்பட்டு ரிஃப்ளக்ஸ் எனும் அமிலம் உருவாகிறது. இந்த அமிலம் வயிற்றுப் பகுதியினை கடுமையாக பாதிக்கலாம்.

பிரா கப் விலகுதல்:

சில நேரங்களில் நீங்கள் அணியும் பிராவானது வீட்டில் நன்றாக பொருந்துவது போல் தோன்றும். ஆனால் நாள் முழுவதும் வெளியே சென்று பணி செய்யும்போது கப்களின் முன்புறம் அல்லது ஓரங்களில் இருந்து உங்கள் மார்பகங்கள் நழுவத் தொடங்கும். ஆகவே, அதுபோன்று நிகழ்வது உங்களுக்கு கவன சிதறல்களை ஏற்படுத்தும். எனவே, பிரா வாங்கும்போது அவற்றின் கப் அளவை கவனிப்பது அவசியம்.
 
உடலின் மேல் பகுதியில் வலி ஏற்படுதல்:

இறுக்கமாக பிரா அணிவது உங்கள் உடம்பிற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு தோள்பட்டை மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.

தள்ளுபடிகள் ஷாப்பிங்:

மாறாக, மாத இறுதி தள்ளுபடி அல்லது ஆண்டின் இறுதி தள்ளுபடி போன்றவற்றை நம்பி பணத்தை இழக்காதீர்கள். எனவே இவை உங்களின் ஆசையைத் தூண்டி அவற்றை நீங்கள் வாங்க வைப்பதற்கான ஒரு சிறிய ட்ரிக் தான் தவிர உங்கள் உடலுக்கு நல்லது அல்ல.

சரியான பிராவை தேர்ந்தெடுப்பது எப்படி?

ஒரு அளவு டேப்பின் மூலம் உங்கள் மார்பகங்களுக்கு கீழ் உள்ள பகுதியின் சுற்றளவை குறித்துக் கொள்ளவும். பின் அந்த அளவுடன் இரண்டு இஞ்சினை கூட்டிக் கொள்ளவும். உதாரணத்திற்கு 40 இஞ்ச் என்று வந்தால் 42 இஞ்ச் என்று வைத்துக் கொள்ளவும். ஒரு பிராவின் தன்மை பொறுத்து அளவு மாறுபட்டும். இருப்பினும், மார்பளவு, கீழ்ப்பகுதி, பின்பகுதி, தோல்ப்பட்டை இறுக்கம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவும். பிராவின் கப் அளவு உங்கள் மார்பகங்களை முழுவதுமாக கவர் செய்வதை உறுதிபடுத்திக்கொள்ளவும். அதேபோன்று, இரவு உறங்கச் செல்லும்போது உள்ளாடைகள் அணிவதைத் தவிர்ப்பதால் இறுக்கம், உராய்வு இல்லாமல் காற்றோட்டமாக இருக்கும். பகலில் இருந்த இறுக்கம் தளர்ந்து, தசைகளும் தளர்ந்து, அழுத்தம் (Pressure) இல்லாமல் ரத்த ஓட்டமும் சீராகும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்