திருமணத்திற்கு முன் எச்.ஐ.வி டெஸ்ட் கட்டாயம்..! வருகிறது புதிய சட்டம்..!

By ezhil mozhiFirst Published Jul 10, 2019, 12:54 PM IST
Highlights

முறையற்ற உறவுகளால் ஏற்படும் எச்ஐவி நோயால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்

திருமணத்திற்கு முன் எச்.ஐ.வி டெஸ்ட் கட்டாயம்..!  வருகிறது புதிய சட்டம்..! 

முறையற்ற உறவுகளால் ஏற்படும் எச்ஐவி நோயால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூலமாக அவர்களின் துணையுடனான தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது எந்த தவறும் செய்யாத தன் துணைக்கும் எச்ஐவி தொற்ற வாய்ப்பு உள்ளது.

எனவே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணமாக திருமணத்திற்கு முன்பாகவே ஒரு நபர் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட உள்ளாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் விதமாக எச்ஐவி பரிசோதனை செய்துகொள்ள ஒரு சட்டத்தை கொண்டுவர கோவா மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

அதன் படி கோவா மாநிலத்தில், திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பாக மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதனை சுகாதாரத்துறை மந்திரி விஸ்வஜித் ரானே உறுதி செய்துள்ளார்.

இந்த ஒரு திட்டத்திற்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளித்து விட்டதாகவும், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு அடுத்து வரும் மழைக்கால கூட்டத்தொடரில், இது தொடர்பாக மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். சட்டசபையில் இந்த மசோதா தாக்கல் செய்து நடைமுறைக்கு வரும் தருவாயில் இது ஒரு நல்ல திட்டமாகவே கருதப்படும் என்பதில் எந்த மாற்றமும்  இல்லை

click me!