
நம்முடைய முன்னோர்கள் காலத்திலிருந்து சில பழக்கவழக்கங்களை காரணம் இல்லாமல் நாம் இப்போது வரை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றிற்கு பின்னால் கண்டிப்பாக உண்மைகள் ஒளிந்திருக்கும். அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களின் ஒன்றுதான் பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது. சில குடும்பங்களில் பிறந்த குழந்தை பிறந்த சில மாதங்களில் அல்லது வருடங்களில் குழந்தைக்கு மொட்டை போடுவது வழக்கம். இந்த பழக்கம் எதனால் பின்பற்றப்படுகிறது என்று இங்கு பார்க்கலாம்.
மொட்டை போடுவது ஏன்?
ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் 10 மாதம் இருக்கும் என்பது அனைவரும் தெரியும். குழந்தையானது தாயின் கருவறையில் இருக்கும் போது ரத்தம் சிறுநீர் போன்ற சூழ்நிலையில் தான் இருக்கும். குழந்தை வெளியே வந்தாலும் நம் கண்ணுக்கு தெரியாத அந்த சில கழிவுகள் குழந்தையின் தலையில் தான் இருக்கும். மேலும் குறிப்பாக இந்த கழிவுகள் குழந்தையின் தலை முடி வழியாகத்தான் வெளியேறும் என்பதால் தான், அவற்றை முழுமையாக அகற்ற குழந்தைக்கு மொட்டை போடுகிறார்கள்.
மொட்டை போடாவிட்டால் என்ன?
ஒருவேளை குழந்தைக்கு மொட்டை போடாவிட்டால் அந்த கழிவுகள் அனைத்தும் குழந்தையின் தலையில் அப்படியே தங்கி சொறி, சிரங்கு, பொடுகு போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.
இரண்டாவது மொட்டை ஏன்?
இன்னும் ஒரு சில குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போட்டவுடன் சில காலத்திலேயே இரண்டாவது மொட்டையும் போடுவது வழக்கம். ஏனெனில், முதல் மொட்டை போடும்போது வெளியேறாத சில கழிவுகள் இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்ற நம்பிக்கை.
அதுபோல், அறிவியல் ரீதியாக பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுங்கள் என்று சொன்னால் மக்கள் கேட்க மாட்டார்கள். அதையே நாம் ஆன்மிகத்துடன் தொடர்புபடுத்தி சொன்னால் கேட்கிறார்கள். எனவே, தான் சாமிக்கு நேர்த்திகடன் என்ற பெயரில் இவ்வாறு செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவியலுடன் ஆன்மிகத்தை இணைத்து உள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.