'ஆலமரம்" ஏன் தேசிய மரம் தெரியுமா? சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே..

Published : Jul 25, 2024, 10:04 AM ISTUpdated : Jul 25, 2024, 02:52 PM IST
'ஆலமரம்" ஏன் தேசிய மரம் தெரியுமா? சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே..

சுருக்கம்

Aala Maram : இந்தியாவின் தேசிய மரம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள ஆலமரம், அதிக ஆக்சிஜனை வெளியிடுகிறது மற்றும் ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த தேசிய அடையாளங்கள் உண்டு. அவை அந்நாட்டு மக்களின் இலக்குகளையும், வரலாற்றையும் பிரதிபலிக்கின்றது. அதன்படி, இந்தியாவும் பல தேசிய அடையாளங்களைக் கொண்டுள்ளது.  அதாவது, இந்தியாவின் தேசிய விலங்கு, பறவை, பூ போன்றவற்றை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தியாவின் தேசிய மரம் எது என்று உங்களுக்கு தெரியுமா? வெகு சிலரே இதை அறிந்திருப்பார்கள். ஆகையால், உங்களுக்காக இந்தியாவின் தேசிய மரம் மற்றும் அது தொடர்பான சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றி இன்றைய கட்டுரையில் சொல்லப்போகிறோம். எனவே, இந்தியாவின் தேசிய மரம் மற்றும் அதன் சிறப்பு என்ன என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

எது இந்தியாவின் தேசிய மரம்?
ஆலமரம் தான் இந்தியாவில் தேசிய மரமாகும். அதன் பயன்பாடு பரந்த தன்மை, அறிவியல் மற்றும் புராண முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்திய அரசு 1950 ஆம் ஆண்டில் ஆலமரத்தை தேசிய மரமாக அறிவித்தது. இந்த மரத்தின் கிளைகள் மிகவும் அடர்த்தியாகவும், நீளமாகவும். இந்த மரம் மிகவும் வலுவான மரமாகும். இது நீண்ட காலத்திற்கு கூட அழியாமல் அப்படியே இருக்கும். இன்றும் பல கிராமங்களில், ஆலமரத்துக்கு அடியில் உட்காருந்து அரட்டை அடிப்பது, அதன் நிழலில் தஞ்சம் அடைவது, பஞ்சாயத்து கூட்டங்கள் நடத்துவது போன்ற விஷயங்கள் செய்யப்படுகின்றது.

இதையும் படிங்க:  என்னை வியக்க வைத்த ஆலமரம்..நீங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க..!!

ஆலமரம் தேசிய மரமாக்கப்பட்டது ஏன்?
எவ்வளவு தான் காற்று, புயல், மழை வந்தால் கூட ஆலமரம் நீண்ட காலம் பசுமையாகவே இருக்கும். காரணம், அதன் கிளைகள் எப்போதும் வளர்ந்து விரிந்து கொண்டே இருக்கும். முக்கியமாக, இந்த மரத்தின் மிகப்பெரிய அமைப்பு எதுவென்றால் அதன் ஆழமான வேர்கள் தான். இது  நாட்டின் ஒற்றுமையின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால்தான் ஆலமரம் தேசிய மரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த மரமானது இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதையும் படிங்க: இந்த நாடுகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரத்தை கூட பார்க்கவே முடியாது! காரணம் என்ன தெரியுமா..?

ஆலமரத்தின் சிறப்பு:
ஆலமரத்தின், வேர் முதல் அதன் இலை வரை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதாவது ஆலமரத்தின் இலைகள், பட்டை, பழம், விதைகள், வேர், விழுதுகள் போன்ற அனைத்தும் மருத்துவ பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா.. ஆலை மரம் சார்ந்தால் கூட அதன் விழுதுகள் மண்ணில் வேரூன்றி வளரும் தன்மையைக் கொண்டது. மேலும், ஆலமரம் பறந்து விரிந்து காணப்படுவதால் இந்த மரமானது பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன. 

இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய ஆலமரம் எது தெரியுமா?
மேற்கு வங்க மாநிலம் ஹெவ்ரா என்ற இடத்தில் உள்ள ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் பூங்காவில் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது.  இந்த மரம் 1787 இல் நடப்பட்டது. இந்த மரம் சுமார் 4 ஏக்கரில் பரவி 80 அடி உயரம் உடையது. இதில் 3,300 விழுதுகள் உள்ளன. ஆலமரம் இவ்வளவு சிறப்புகளை கொண்டதால்தான், இது தேசிய மரமாக போற்றப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்