
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நிலவி வரும் நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் நிலவ உள்ள வானிலை மாற்றம் குறித்து வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாளும் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மாதேவி மற்றும் பாளையங்கோட்டைப் பகுதிகளில் 10 சென்டி மீட்டர் மழையும், தூத்துக்குடியின் குலசேகரப்பட்டினத்தில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.