இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாக இதுதான் காரணம்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

By ezhil mozhiFirst Published Nov 15, 2019, 6:16 PM IST
Highlights

குறிப்பாக 21 வயதை கடக்கும் இளைஞர்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாவதும்  அதற்கு முக்கிய காரணம் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ஒருவிதமான பதட்டத்துடனே அவர்கள் இருப்பதனால் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாக இதுதான் காரணம்..! ஆய்வில் அதிர்ச்சி  தகவல்..! 

மது பழக்கத்திற்கு அடிமையாக மிக முக்கிய காரணம் மனப்பதட்டம் என பிரிஸ்டோல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.

குறிப்பாக 21 வயதை கடக்கும் இளைஞர்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாவதும் அதற்கு முக்கிய காரணம் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ஒருவிதமான பதட்டத்துடனே அவர்கள் இருப்பதனால் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள்  அதனைத் தொடர்ந்து சிகரெட் கஞ்சா போன்ற பழக்கங்களுக்கும் அடிமையாவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது

இதனை தடுக்க வேண்டும் என்றால் சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு உண்டான பதட்டத்தை கண்டறிந்து அதில் இருந்து விடுபட செய்தாலே மது பழக்கத்திற்கு அடிமையாவது தவிர்க்கலாம் என இந்த ஆய்வை மேற்கொண்ட தலைவர் மேடி  டையர் தெரிவித்துள்ளார்.

 மனபதட்டம் என்பது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை அல்லது உறவு முறையில் ஏற்படும் பிரச்சனையை மட்டும் சார்ந்தது என கூறுவது தவறானது. மனநல பாதிப்பு இருந்தாலும் மது பழக்கத்திற்கு ஆளாக நேரிடுகிறது என்றும் அதனால் மனப்பதட்டத்தை  சரி செய்தாலே போதுமானது என்றும், இவ்வாறு செய்தால் மதுவுக்கு அடிமையாவது தவிர்க்கலாம் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!