கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுதாம் மழை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Published : Jul 23, 2019, 04:04 PM IST
கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுதாம் மழை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

சுருக்கம்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக,ஒரு சில இடங்களில் மட்டும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென்மேற்கு பருவமழை தற்போது கேரளாவில் வலுப்பெற்று இருப்பதால் இதன் எதிரொலியாக நீலகிரி மற்றும் கோவை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தோடு கணக்கிட்டு பார்த்தால், சின்னக்கல்லாரில் 7 செண்டி மீட்டர் மழையும், நீலகிரியில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இந்த வாரம் முழுவதும் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Rice Water: முடி நீளமாக வளர இந்த ஒரு டிப்ஸ் போதும்! நோட் பண்ணுங்க!
Low Calorie Foods: வெயிட் குறைக்கணுமா? இந்த 7 உணவுகளை தினமும்சாப்பிடுங்க!