சயன கோல அத்தி வரதரை தரிசிக்கிறார் முதல்வர்..! அன்று கூட்டம் அப்படி.. ஆனால் இன்று பாருங்க..!

By ezhil mozhiFirst Published Jul 23, 2019, 1:36 PM IST
Highlights

நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மிகவும் விசேஷமான அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது

சயன கோல அத்தி வரதரை தரிசிக்கிறார் முதல்வர்..! அன்று கூட்டம் அப்படி.. ஆனால் இன்று பாருங்க..!  

நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மிகவும் விசேஷமான அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை காண ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, அதாவது 18 ஆம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மூன்று குழந்தைகள் தொலைந்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் 23 ஆம் தேதியான இன்று மதியம் 2 மணியளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் இதற்கு முன்னதாக மூச்சுவிடக்கூட முடியாத அளவிற்கு இருந்த கூட்டம் மட்டுமே பார்க்க முடிந்த நமக்கு... இன்று முதல்வர் வருகையையொட்டி மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதால் குறிப்பிட்ட வழியில் யாரும் செல்லாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த காட்சி இதோ.....

மேலும் 23 ஆம் தேதியான இன்று பிரதமர் நரேந்திர மோடி அத்திவரதரை தரிசனம் செய்ய வருகை புரிவதாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் அவருடைய வருகை ரத்து செய்யப்பட்டத்தை தொடர்ந்து, இதே நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அத்தி வரதரை தரிசனம் செய்ய இன்று மதியம் 2 மணிக்கு காஞ்சிபுரம் வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!