பேய் மழையை தாண்டி விபரீத மழை..! நீலகிரியில் திக் திக் நிமிட மழை காட்சிகள் ..!

By ezhil mozhiFirst Published Aug 9, 2019, 1:39 PM IST
Highlights

தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி கோவை தேனி ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமானமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

பேய் மழையை தாண்டி விபரீத  மழை..! நீலகிரியில் திக் திக் நிமிட மழை காட்சிகள் ..!  

தென்மேற்கு பருவ காற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வலுவாக இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அதெரிவித்து உள்ளது. 

இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி கோவை தேனி ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமானமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம்  அவலாஞ்சியில் 91.1 சென்டி மீட்டர் மழையும், மேல் பவானியில் 45 சென்டி மீட்டர் மழையம்  பதிவாகியுள்ளது.மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்தது வரும் இரு தினங்களுக்கு  மீனவர்கள் கடலுக்குல் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே மீனவர்கள் தமிழக கடற்கரை பகுதிகளில் அடுத்த ஓரிரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதே போன்று, தென்மேற்கு பருவக்காற்று வலுவான நிலையில் தொடர்ந்து இருப்பதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு நீலகிரி மற்றும் கோவையில் மிக மிக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 76 ஆண்டு  காலங்களில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தென் மேற்கு மழையால் நீலகிரியில் இதுவரை இல்லாத அளவிற்கு 911 மி மீ மழை பதிவாகி புதிய ரெகார்ட் செய்து உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது

click me!