நேற்று 6 மணிக்கு நிகழ்ந்தது சென்னை..? அதிசய மழையால் அசந்து போன சென்னை...!

By ezhil mozhiFirst Published Aug 29, 2019, 12:54 PM IST
Highlights

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் மழை பெய்யவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென லேசான மழை பெய்ய தொடங்கியது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் தொடங்கிய திடீர் மழை சென்னை மக்களே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் மழை பெய்யவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென லேசான மழை பெய்ய தொடங்கியது. திருவல்லிக்கேணி சேப்பாக்கம் அடையாறு ராயப்பேட்டை மயிலாப்பூர் எழும்பூர் கோயம்பேடு வடபழனி அண்ணாநகர் புரசைவாக்கம் பெரம்பூர் மாதவரம் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் தாம்பரம் வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பரவலான மழை பெய்ததால் பொதுமக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வந்த இந்த மிதமான மழையால் சென்னையே குளிர்ந்து விட்டது என்று சொல்லலாம். இப்படி ஒரு மாலை நேர மழையில் மக்கள் நேற்று பெய்த மழையால் மகிழ்ச்சியாக இருந்தனர். இது தவிர நேற்று மாலை பெய்த மழைக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் பல்வேறு உட்புற சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கடந்த ஒரு வார காலமாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்ட நிலையில் திடீரென பெய்த மிதமான மழையால் சென்னை குளிர்ந்து விட்டது என்றே சொல்லலாம் .ஆனால் இன்று வழக்கம் போல காலை முதலே வெப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!