மனதில் பட்டதை பேசுவீர்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசு அதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலம் உண்டு.
மேஷம் முதல் மீனம் வரை அற்புத ராசிப்பலன்...! நீங்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா..?
மேஷ ராசி நேயர்களே...!
இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகும் நாள். விடாப்பிடியாக சில வேலைகளை வேகமாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷப ராசி நேயர்களே..!
மனதில் பட்டதை பேசுவீர்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசு அதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலம் உண்டு.
மிதுன ராசி நேயர்களே...!
சொன்ன சொல்லை காப்பாற்ற வேகமாக செயல்பட்டு அதனை முடித்துக் காட்டுவீர்கள். மனதுக்கு பிடித்தவர்கள் சில வேலைகளை செய்து கொடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடக ராசி நேயர்களே..!
சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் செயல்படுத்தப்படும் உங்களுக்கு அமையும். அவ்வப்போது சலசலப்பு வந்து போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து மனம் கலங்குவீர்கள்.
சிம்ம ராசி நேயர்களே...!
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
கன்னி ராசி நேயர்களே...!
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு பிடித்த சில பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உடல்நிலை சீராக பார்த்துக்கொள்வது நல்லது. திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
துலாம் ராசி நேயர்களே...!
எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்ய தேவையான பண வரவு உங்களுக்கு வந்து சேரும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடுவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே...!
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கூடிவரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்.
தனுசு ராசி நேயர்களே...!
எதையோ இழந்ததைப் போல கவலை அவ்வப்போது வந்து நீங்கும். நெருங்கியவர்களிடம் உங்களது மனக்குமுறலை சொல்லி சாந்தமாவீர்கள்.
மகர ராசி நேயர்களே...!
மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்தபந்தங்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்ப ராசிநேயர்களே....!
குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து அடையும்.
மீனராசி நேயர்களே...!
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் உங்களுக்கு ஆதாயமுண்டு. திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.