இந்த 9 மாவட்டத்தில் பேய் மழை பெய்யப் போகுதாம்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

Published : Aug 19, 2019, 03:14 PM IST
இந்த 9 மாவட்டத்தில் பேய் மழை பெய்யப் போகுதாம்..!  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

சுருக்கம்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 17 சென்டி மீட்டரும், ஆம்பூரில் 15 சென்டி மீட்டரும், குடியாத்தத்தில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்த 9 மாவட்டத்தில் பேய் மழை பெய்யப் போகுதாம்..!  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...! 

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த  சில நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதுமே இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்து உள்ளது.

குறிப்பாக கடலூர் விழுப்புரம் நாமக்கல் திருச்சி மதுரை கிருஷ்ணகிரி தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 17 சென்டி மீட்டரும், ஆம்பூரில் 15 சென்டி மீட்டரும், குடியாத்தத்தில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மட்டும் இதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே வேளையில் இன்று காலை முதலே சென்னையில் நல்ல வெயில் நிலவி வருகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Sitting for Long Hours: காலை முதல் மாலை வரை நாற்காலியில்தானா? நீண்ட நேரம் உட்காருவதால் வரும் ஆபத்துகள் இதோ
Washing Machine : துணி துவைக்கும்போது இந்த 7 தவறுகளை செய்றீங்களா? மெஷினும் துணியும் பாதிக்கலாம்!