பூரியும் கிழங்கு மசாலாவும் நம்மில் பலருக்கும் பிடித்தமான காம்போ. புசுபுசுன்னு உப்பிய பூரியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
பூரியின் தீவிர ரசிகர்களாக இருந்தாலும், உடல் நலனைக் கருத்தில் கொண்டு பலர் அதைத் தவிர்த்து விடுகிறார்கள். இனி கவலை வேண்டாம். நீங்களும் எண்ணெய் இல்லாமலேயே பூரி செய்யலாம்.
எண்ணெய் இல்லாமலேயே வீட்டில் சுவையான பூரியை நீங்க தயாரிக்கலாம். அது எப்படி என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
எண்ணெயில் பொரித்த பூரி உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் அபாயத்தை அதிகரிக்கும். அதனால், எண்ணெய் இல்லாத பூரி தயாரிக்கும் முறையை இன்று உங்களுக்குச் சொல்கிறோம். இது ரொம்பவே சுலபம்.
இந்த முறையில், பூரியை பொரிக்க எண்ணெய்க்குப் பதிலாக தண்ணீர் தேவை. எண்ணெய் இல்லாத பூரி செய்ய, உங்கள் வீட்டில் ஒரு ஏர் பிரையர் (Air Fryer) இருக்க வேண்டும்.
முதலில் மாவுடன் சிறிதளவு உப்பு மற்றும் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். மாவு பிசைந்த பிறகு, சிறிய உருண்டைகளாகப் பிரித்து பூரி போல தேய்த்துக் கொள்ளவும்.
தண்ணீரை கொதிக்க வைக்கவும். தேய்த்து வைத்த பூரிகளை தண்ணீரில் போடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், பூரிகள் மேலே மிதக்க ஆரம்பிக்கும். சிறிது நேரம் கழித்து அவற்றை வெளியே எடுக்கவும்
கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மீது இட்லி தட்டை வைக்கவும். அதன் மேல் பூரிகளை வைத்து, 2 நிமிடங்கள் நீராவியில் வேக வைத்து, பின்னர் எடுத்துவிடவும்.
இப்போது, ஏர் பிரையரைப் பயன்படுத்த வேண்டும். அதை 180 டிகிரியில் ப்ரீ-ஹீட் செய்யவும். வேகவைத்த பூரிகளை ஏர் பிரையரில் வைத்து நான்கு நிமிடங்கள் சமைக்கவும்.
இப்போது, உருளைக்கிழங்கு மசாலா, குருமா அல்லது சென்னா மசாலாவுடன் சூடாகப் பரிமாறவும்.