பேய் மழை பெய்யப்போகும் மாவட்டங்கள்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!

Published : Sep 16, 2019, 04:21 PM IST
பேய் மழை பெய்யப்போகும் மாவட்டங்கள்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!

சுருக்கம்

சென்னையை பொறுத்தவரையில் வானம்  மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேய் மழை பெய்யப்போகும் மாவட்டங்கள்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...! 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பாக சிவகங்கை காஞ்சிபுரம் வேலூர் ராமநாதபுரம் விருதுநகர் தூத்துக்குடி திருவாரூர் தஞ்சாவூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

சென்னை 

சென்னையை பொறுத்தவரையில் வானம்  மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்கள்
 
அடுத்து வரும் 2 நாட்களுக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Towel Planter DIY: பழைய டவலை தூக்கி போடாதீங்க! 5 மாடர்ன் செடித் தொட்டிகளை ஈஸியா செய்யலாம்!
Gas Burner Cleaning: கேஸ் ரொம்ப செலவாகுதா? பர்னரை இப்படி சுத்தம் பண்ணுங்க.! 15 நாள் கேஸ் எக்ஸ்ட்ரா வரும்.!