100 டிகிரி ஃபாரனெட்டை தாண்டியது வெப்பத்தின் அளவு..! உஷார் மக்களே..! திருத்தணியில் 104 டிகிரி..!

Published : Mar 05, 2019, 08:26 PM IST
100 டிகிரி ஃபாரனெட்டை தாண்டியது வெப்பத்தின் அளவு..! உஷார்  மக்களே..! திருத்தணியில் 104 டிகிரி..!

சுருக்கம்

தமிழ் நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரனெட்டை தொட்டுள்ளது.

தமிழ் நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரனெட்டை தொட்டுள்ளது. ஏற்கனவே 6,7 ஆம் தேதியன்று தமிழகத்தில் அனல் காற்றுடன் பயங்கர வெயில் நிலவும் என நேற்று முன்தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில், இன்றே 100 டிகிரி பாரனெட்டை தொட்டுள்ளது என்றால் நீங்களே பாருங்களேன். ஒவ்வொரு ஆண்டும் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

குமரி முதல் கர்நாடகம் வரை காற்றின் ஈரப்பதம் குறைந்து உள்ளதால்,வெயில் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்றாற்போல், இன்று ஒரே நாளில்,திருத்தணி,சேலம்,வேலூர், மதுரை, தருமபுரி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெயில்100 டிகிரியை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதில் குறிப்பாக திருத்தணியில்104 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது, எனவே நாளை மற்றும் நாளை மறுதினம் கூட வெயில் அதிகளவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், அதற்கேற்றவாறு மக்கள் எங்கு சென்றாலும் வாட்டர் பாட்டில், குடை வைத்து இருப்பது நல்லது.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Drinks: வெயிலை சமாளிக்க 9 சூப்பர் ஹோம்மேட் பானங்கள்! உடம்புக்கும் நல்லது, தெம்பாவும் இருக்கலாம்!
Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!