Kidney mudra: சிறுநீரக செயல் இழப்பு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முத்திரைகள்...!!

Anija Kannan   | Asianet News
Published : Jan 30, 2022, 06:37 AM IST
Kidney mudra: சிறுநீரக செயல் இழப்பு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முத்திரைகள்...!!

சுருக்கம்

நீரிழிவு, சிறுநீரக செயல் இழப்பு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய எளிமையான முத்திரைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீரிழிவு, சிறுநீரக செயல் இழப்பு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய எளிமையான முத்திரைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய மேற்கத்திய கலாச்சாரம், உயர் ரத்த அழுத்தம், மது, சிகரெட் பிடித்தல், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகள் உண்ணுதல், மன அழுத்தம் போன்றவை பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், பெரும்பாலானோர் சந்திக்கும், நீரிழிவு, சிறுநீரக செயல் இழப்பு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய சில எளிமையான முத்திரைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 மூத்ராக்ஷய முத்திரை:

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  ஒரு பத்து முறைகள்.  பின் கண்களை திறந்து மோதிரவிரல், சுண்டு விரலை மடக்கி உள்ளங்கையை தொடும்படி வைத்து மோதிரவிரல் மீது கட்டை விரலை வைக்கவும்.  ஆள்காட்டி விரலும், நடுவிரலும் நீட்டி இருக்க வேண்டும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்பிடும்முன்  செய்யவும்.  மூன்று முறைகள் பயிற்சி செய்ய முடியாதவர்கள் காலை, மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும். சிறுநீரக செயல் இழப்பு, மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவும். 

ஜலோதர நாசக் முத்திரை:

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெது வாக மூச்சை இழுத்து மெது வாக மூச்சை வெளி விடவும்.  ஒரு பத்து முறைகள்.  பின் கண் களை திறந்து சுண்டு விரலின் நகத் திற்கு கீழ் கட்டைவிரல் நுனியை தொட வேண்டும். மடக்கிய சுண்டு விரலின் நகத்தின் மேல் கட்டைவிரல் நுனி தொட்டுக் கொண்டிருக்கிறது. சுண்டுவிரல் நீர் மூலகம், கட்டை விரல்நெருப்பு மூலகம்.  நீர் மூலகத்தின் மேல் நெருப்பு மூலகம் உள்ளது. இரண்டு நிமிடங்கள் காலை, மாலை பயிற்சி செய்யவும்.  சிறுநீரகம் மிகச் சிறப்பாக சக்தி பெற்று இயங்கும்.

சுப்த மச்சேந்திராசனம்:

விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி மல்லாக்கப்படுக்க வேண்டும். வலது காலை மட்டும் மடக்கி நெஞ்சுக்கு நேராக (இடதுபுறமாக) நீட்ட வேண்டும். அதன் பிறகு வலது காலை இடது கையால் பிடிக்க வேண்டும்.

அதே வேளையில் வலது கையை நேராக நீட்டி வைக்கவும். தலையை வலதுபுறமாக சாய்க்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். பின்னர் கால்களை மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

இந்த முத்திரை கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்க செய்யும். அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த முத்திரை உகந்தது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கும். சிறுநீரகப்பிரச்சனைகளையும் சரி செய்ய உதவும். எனவே, மேற் கூறிய முத்திரைகளை கடைபிடித்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்