காலை எழுந்தவுடன் இந்த வேலையை முதலில் செய்யுங்க...அப்புறம் நடக்கும் அற்புதம் பாருங்க!

manimegalai a   | Asianet News
Published : Jan 09, 2022, 08:42 AM IST
காலை எழுந்தவுடன் இந்த வேலையை முதலில் செய்யுங்க...அப்புறம் நடக்கும் அற்புதம் பாருங்க!

சுருக்கம்

காலை எழுந்தவுடன் தினமும் 'வாக்கிங்' மேற்கொள்வதால்  உடல் ஆரோக்கியமாக புத்துணர்ச்சியாக  வாழலாம்.

இன்றைய நவீன உலகில், தினமும், சாப்பிடுவது மற்றும் உறங்குவதைப் போன்று நடைப்பயிற்சியும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கரோனாவைத் தடுக்க முகக்கவசம் அத்தியாவசியம் என்பதைப் போல, நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ நடைபயிற்சி அத்தியாவசியம்.

உடல் உபாதைகள்:

உடலுக்குத் தேவையான அளவு அசைவுகளைக் கொடுக்காததால், ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படுகிறது. ரத்தக்குழாய்களில் தடிமனாகப் படிந்துள்ள கொழுப்புப் திட்டுக்கள், பானையைப் போன்ற வயிறு, சூரிய ஒளி பற்றாக் குறையால் ஏற்பட்டிருக்கும் வைட்டமின்- டி குறைபாடு, நெகிழ்வாக இருக்க வேண்டிய மூட்டுப் பகுதிகள் அசைவின்றிக் கடினமாக மாறிவிட்ட அவலம், உடலின் முக்கிய உள்ளுறுப்பு களின் திறன் குறைபாடு, உறக்கமின்மை எனும் மனரீதியான துன்பம், கஷ்டப்பட்டு உறங்கினாலும், மறுநாள் காலையில் ஏற்படும் கடுமையான உடற்சோர்வு, இயற்கையாக நிகழ வேண்டிய கழிவு நீக்க முறைகளில் பெரும் தடை, திக்கித் திணறும் செரிமானம் என எண்ணிலடங்காத உடல்ரீதியான திண்டாட்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

 நவீன கால உபாதைகள்:

முறையான உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால், முதியவர்களை மட்டும் அல்ல நடுத்தர வயதினரையும் அதிக அளவு பாதிக்கும். துள்ளல் நிறைந்த குழந்தைப் பருவத்தில் நீரிழிவு நோயையோ, இளம் வயதில் அதீத உடற் பருமனையோ, இளம் வயதில் மாரடைப்பையோ, திருமணப் பருவத்தில் குழந்தையின்மை பிரச்சினையையோ நாற்பதுகளில் மூட்டுப் பிரச்சினைகளையோ சென்ற தலைமுறை எதிர்பார்த்திருக்குமா? உடல் உழைப்புக் குறைபாட்டால் மேற்சொன்ன விபரீதங்களை இந்தத் தலைமுறை சந்தித்துக்கொண்டிருக்கிறது.

நடைபயிற்சி:

நடைபயிற்சி என்பது உடல் எவ்வகையில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் நலக் கண்ணாடி ஆகும். நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, இயல்பைவிட அதிக அளவில் மார்புப்படபடப்போ, மூச்சு வாங்கும் அறிகுறியோ, வேறு அறிகுறியோ தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆனால், நடைபயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதால், நம்மிடம் உடல் என்ன சொல்ல வருகிறது என்பதைக் கேட்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது.

நேர்மறை சிந்தனை

குளிர்ச்சியான ஒரு காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது உண்டாகும் பரவசத்தை உணரத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுவதும் நடைபயிற்சியை அசையும் சொத்தாகப் பத்திரப்படுத்திக்கொள்வீர்கள். நடக்கும்போது உடலுக்குக் கிடைக்கும் பலன்களுக்கு இணைப்பாக மனத்துக்கும் உற்சாகம் கிடைக்கும். நடைபயிற்சியின் மூலம் தினமும் நமது உடலுக்கு ஏதோ ஒரு நன்மை கிடைத்துக்கொண்டிருக்கும். எனும் நேர்மறை எண்ணமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் என்கின்றன ஆராய்ச்சிகள்.

அற்புத பலன்கள்:

உடல் எடையை எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்க, உலகம் முழுவதும் உள்ள மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு நடைபயிற்சி. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க, மருந்துகளோடு நடைபயிற்சியும் அவசியம் என்கின்றன ஆய்வறிக்கைகள். ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க நடைபயிற்சி பெரிய அளவில் பலன்கொடுக்கும்.

இரவில் ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுப்பதோடு, நாள் முழுவதும் உற்சாகத்தை அள்ளிக்கொடுக்க நடைபயிற்சி அவசியம். நடைபயிற்சியின் மூலம் எலும்புகள், தசைகள் வலிமை அடைவதோடு சுவாசப்பாதையும் புத்துணர்வு பெறும். செரிமானக் கருவிகளில் தேங்கும் கழிவு முழுமையாக அகல பேருதவி புரியும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் அரை மணி நேர நடை மேற்சொன்ன அனைத்துப் பலன்களையும் வழங்கும்.

 செல்போனை தவிர்த்தல்:

 வாய்ப்பிருந்தால், அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்கிறீர்கள் என்றால், வீட்டிலேயே செல்போனை வைத்து விட்டுச் செல்லலாம் அல்லது செல்போன் ஒலிப்பானை அணைத்துவிட்டு, நடைபயிற்சி முடிக்கும் வரை, எக்காரணத்தைக் கொண்டும் செல்போனை எடுத்து வாட்ஸ்-அப்பையோ முகநூலையோ பார்க்க மாட்டேன் எனும் மனோதிடத்தை உருவாக்கிக்கொள்ளப் பழகுவது மனத்துக்குச் சுகமளிக்கும். இடையூறு அற்ற நடைபயிற்சி புது சிந்தனைகளைத் தூண்ட உதவும். கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் புதிய இடம், அழகிய சூழல் வார்த்தைகளை வழங்குவதைப் போல, அனைவருக்கும் மகிழ்ச்சியான புதுப்புது சிந்தனைகளை மலரச் செய்து மனத்துக்குப் புத்துணர்வு அளிக்க நடைபயிற்சி துணை நிற்கும். அதே நேரம், முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது தொடர்புக்காக அலை பேசியை வைத்துக்கொள்வதில் தவறில்லை.

 அதே சமயம், இந்த கரோனா கால கட்டத்தில், இடைவெளி விட்டு ஆரோக்கியமான நடைப்பயிற்சியை மேற்கொள்வது அவசியம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்