Happy Promise Day 2022: இன்று ''பிராமிஸ்'' தினம்! உங்கள் காதலை மேலும் உறுதியாக்க அசத்தலான 5 டிப்ஸ்!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 11, 2022, 07:52 AM ISTUpdated : Feb 11, 2022, 07:54 AM IST
Happy Promise Day 2022: இன்று ''பிராமிஸ்'' தினம்! உங்கள் காதலை மேலும் உறுதியாக்க அசத்தலான 5 டிப்ஸ்!!

சுருக்கம்

ரொமான்டிக் வாரத்தின் ஐந்தாவது நாள் பிப்ரவரி 7-ம் தேதி வாக்குறுதி தினம்.

பிப்ரவரி 14ஆம் தேதி வாலண்டைன்ஸ் டே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்காக ஏங்காத காதலர்களே கிடையாது எனலாம் . தற்போது, காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்த ஜோடிகள்,வயதான ஜோடிகள் என்று அனைவரும் தங்களுடைய காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் தினந்தேறும் நம் காதலி அல்லது காதலனிடம் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாளன்று வெளிப்படுத்துவது ஒரு ஸ்பெஷல் தருணமாக மறக்க முடியாத நினைவாக கொண்டாடப்படுகிறது. 

உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது.  இந்த மாதத்தில் பிப்ரவரி 7, 2022 ல் ஆரம்பித்து பிப்ரவரி 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும். ரோஸ் தினம், ப்ரோப்போஸ் தினம், சாக்லேட் தினம், டெடி தினம், பிராமிஸ் தினம், முத்த தினம், கட்டிப்பிடித்தல் தினம், காதலர் தினம்,   என காதலைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

ரொமான்டிக் வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று பிப்ரவரி 7-ம் தேதி வாக்குறுதி தினம்.

வாக்குறுதி தினம் (Promise Day)

காதலர்கள் தினம் வாரத்தின் ஐந்தாவது நாளாக வரும் இந்த பிராமிஸ் தினம் தான் அந்த காதல் உறவில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய தொடக்கமாக இருக்கிறது.

இந்த நாளில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு கண்ணை பார்த்து நீங்கள் கொடுக்க வேண்டிய வாக்குறுதி  கள்.

1. உனக்கு நான் நல்ல நண்பரை (Friendship) போன்று, உனக்கு எல்லாமாகவும் நான் இந்த வாழ்க்கையில் இருப்பேன் என்று சத்தியம் செய்யலாம்.

2. ஒற்றுமையுடன் (Togetherness) வாழ்வதற்காக கடைசிவரை உன்னுடனே ஒற்றுமையுடன் வாழ்வேன் என்று 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை அவர் கண்களை பார்த்து கூறலாம். நேர்மையுடன் (Honesty) எப்போதுமே நான் உன்னிடம் நடந்துகொள்வேன் என்ற சத்தியம் செய்யலாம். 

3. காதலர்கள் மட்டுமல்லாமல் திருமணமானவர்களும் இந்த நாள் தங்களது வாழ்க்கையைப் புதுப்பித்து வாழ வாய்ப்பு அளிக்கிறது. எனவே உங்கள் அன்புக்குரியவரிடம் என்ன நடந்தாலும் உன்னை விட்டு பிரிய மாட்டேன். என்னை நம்பி வந்தால் உன்னை வாழ்க்கையின் வரமாகப் பார்த்துக்கொள்வேன் என்று வாக்குறுதி அளிக்கலாம்.

 4. என் வாழ்வில் எந்த ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் உன்னோடு அதை எதிர்கொள்வேன், உன்னை விட்டு பிரிய மாட்டேன். உன்னை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வேன். உன்னை கண் கலங்க விடமாட்டேன். எல்லா விருப்பு வெறுப்புகளிலும், பங்கெடுத்துக்கொள்வேன்.

5. உனக்கு கடினமான எந்த சூழ்நிலை வந்தாலும், நான் உன்பக்கம் உனக்கு ஆதரவாக (Support) இருப்பேன். உன்னை எப்போதும் கைவிட மாட்டேன். உன் விருப்பம் போல நடந்து கொள்வேன். எந்த சூழ்நிலையிலும் உன் மனதை காயப்படுத்த மாட்டேன். உன்னை புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.  இதுவே என் வாழ்வின் லட்சியம் என்று உங்கள் காதலரிடம் வாக்குறுதிகளை வழங்குங்கள்.

மேலே சொன்னவை உங்கள் காதலை மேலும், உறுதியாக்க உதவியாக இருக்கும். நீங்கள் காதலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்