உங்கள் திருமண வாழ்வில் அடிக்கடி பிரச்சனையா? நீங்கள் கவனிக்க வேண்டிய 6 காரணிகள்!

manimegalai a   | Asianet News
Published : Jan 07, 2022, 10:27 AM IST
உங்கள் திருமண வாழ்வில் அடிக்கடி பிரச்சனையா? நீங்கள் கவனிக்க வேண்டிய 6 காரணிகள்!

சுருக்கம்

ஆரோக்கியமான, வலுவான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கான 6 எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய முன்னோர்கள் கணவன்-மனைவி இருவரும் இனி வரும் நாட்களில் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன், திருமணங்களை "ஆயிரம் காலத்துப் பயிர்" என்று குறிப்பிட்டனர். அவர்களிடையே பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், அன்பு, புரிதல், நம்பிக்கை மிக அவசியம். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் உண்மையான அன்பிலும் உறவிலும் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். அதனால் தான், இன்றைய நவீன உலகில் திருமணம் என்பது இணையம் வழியாக நடைபெற்று அதன் மூலம் முடிவடைய துவங்கியுள்ளது. இருப்பினும், வெகு சிலர் மட்டுமே, தங்கள் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக கடந்து செல்கின்றனர். எனவே, ஆரோக்கியமான, வலுவான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கான 6 எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


 
1. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது நல்லது:

கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்படும் சமயத்தில், கடந்த கால தவறுகளை கொண்டு வருவது நிலைமையை இன்னும் மோசமாக்கும். எனவே, சிக்கல்களை இணக்கமாக தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, நீங்களும் உங்கள் துணையோடு வாதிடுகிறீர்கள் என்றால், உரையாடலை தேவையற்ற திசைகளில் தவறாக வழிநடத்துவதை விட, நீங்கள் இருவரும் எதிர்கொள்ளும் தற்போதைய சிக்கலைக் கையாள்வதில் கவனம் செலுத்துங்கள். பொதுவாக, வெவ்வேறு ஆளுமைகளைக் கொண்ட இரண்டு நபர்களிடையே, அதிக அளவில் கருத்து வேறுபாடு இருக்கும். இருப்பினும், நியாயமாக போராடி பிரச்சினையைத் தீர்க்கவும். எந்தவொரு விஷயத்திலும் உங்கள் இருவருக்கும் சமமான கருத்து இருப்பதை உறுதிப்படுத்தவும்.

2. ஒருவருக்கொருவர் அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்கள்:

உங்கள் வாழ்க்கையில் அவர்கள், செய்த பங்களிப்புக்காக உங்கள் பாராட்டையும் நன்றியையும் தெரிவிப்பது அவசியம். காதல் என்பது உடல் ரீதியான நெருக்கம் மட்டுமல்ல. வரவேற்பு, அரவணைப்பு அல்லது முத்தம் அல்லது ஒரு சிறிய பரிசு போன்ற சிறிய சைகைகள் மூலம் உங்கள் துணையுடன் உங்கள் அன்பைக் காட்டலாம். குறிப்பாக, அவர்கள் உங்களுக்காகச் செய்யும் எளிய விஷயங்களை மதிப்பிட கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் அவர்கள் போட்டிருக்கும் உடை  அழகாக இருப்பதாக கூறுவது கூட உண்மையில் அவர்கள் முகத்தில் அழகை பிரதிபலிக்கும். மேலும், எந்த நேரத்திலும் அவர்களின் குணங்கள் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் புகழ்வது நிச்சயமாக அவர்களை ஊக்குவிக்கும்.

3. தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்:

தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆசைகளை பூர்த்தி செய்ய வேண்டும். உங்கள் துணை சில வீட்டு வேலைகள் அல்லது அடிப்படை வசதிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கும்போது அவற்றை செய்து முடியுங்கள். உங்கள் துணை உங்களுடையதை விட வித்தியாசமாக இருந்தாலும் அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளுங்கள். தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான அவர்களின் எதிர்பார்ப்புகளை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவது முக்கியம். அதிகப்படியான விமர்சன, மனச்சோர்வு அல்லது தீர்ப்பளிக்கும் நடத்தை உங்கள் துணையின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தி அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. நல்ல நண்பராக இருங்கள்:

எந்த தகவலாக இருப்பினும், உங்கள் மனைவியிடம் முதலில் தெரியப்படுத்த வேண்டும். இது, உங்கள் வாழ்க்கையில் அவர்கள் பாதி என்ற நிலையை அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. நீங்கள் வெளியில் சிறந்த நண்பர்களைக் கொண்டிருந்தாலும், உங்கள் மனைவியுடன் வீட்டில் அதிக நேரத்தை செலவிடுங்கள். அடிக்கடி இருவரும் தன்னிச்சையான பயணங்களுக்குச் சென்று ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்ளுங்கள். இது உங்கள் இருவரையும் திருமண வாழ்வில் மகிழ்ச்சியுடன் வழி நடத்த உதவும்.

5 எந்த ரகசியமும் இல்லை:

திருமண பந்தத்திற்குள் நுழைந்த பிறகு எந்த ஒரு விஷயத்திலும் ரகசியம் காப்பது நியாயமானது அல்ல. பிரச்சனைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஒருபக்கம் இருந்தாலும் கூட நீங்களும், உங்கள் துணையும் எந்த விஷயத்தையும் சமரசம் செய்து கொள்ளாமல் ஒளிவு மறைவின்றி ஒருவருக்கொருவர் விஷயங்களை பரிமாறி கொள்கிறீர்களா? உங்கள் இருவருக்குமான தொடர்பு வலிமையாக இருப்பதை இது காட்டுகிறது.


6. சிறிய சிக்கல்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்

முடிந்தவரை சண்டையில் கூறும் விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்களும் உங்கள் துணையுடன் சண்டையிடும்போது கூறும் விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்வது அவசியமில்லை. அவர்கள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால், சிறிது நேரம் சிந்தித்து, மன்னிப்பு கேட்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தம்பதிகளுக்கு இடையிலான மோதல்களுக்கு மன அழுத்தம் மிகவும் பொதுவான காரணம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவது அல்லது அவர்கள் செய்த விஷயங்கள் குறித்து வாதங்களை எடுப்பது தவிர்ப்பது அவசியம். அவர்கள் கோபமாக இருந்தால், அவர்களை மகிழ்ச்சியடைய செய்யும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

'விட்டுக்கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை' என்பது பழமொழி. இது இல்லற வாழ்க்கையின் இலக்கணம் என்பதனை மறந்துவிடாதீர்கள். எனவே, தம்பதியினர் மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் மனம் போல் இந்த திருமண பயணத்தை நீங்கள் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் கொண்டாட வாழ்த்துக்கள்!


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்