
பிப்ரவரி 14ஆம் தேதி வாலண்டைன்ஸ் டே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்காக ஏங்காத காதலர்களே கிடையாது எனலாம் . தற்போது, காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்த ஜோடிகள்,வயதான ஜோடிகள் என்று அனைவரும் தங்களுடைய காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் தினந்தேறும் நம் காதலி அல்லது காதலனிடம் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாளன்று வெளிப்படுத்துவது ஒரு ஸ்பெஷல் தருணமாக மறக்க முடியாத நினைவாக கொண்டாடப்படுகிறது.
உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில் பிப்ரவரி 7, 2022 ல் ஆரம்பித்து பிப்ரவரி 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும். ரோஸ் தினம், ப்ரோப்போஸ் தினம், சாக்லேட் தினம், டெடி தினம், பிராமிஸ் தினம், முத்த தினம், கட்டிப்பிடித்தல் தினம், காதலர் தினம், என காதலைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.
இதில் நேற்று வாக்குறுதி தினம் (Promise Day) முடிந்துவிட்டது. இன்று தழுவுதல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலை வெளிப்படுத்தும் தினமாக இது பார்க்கப்படுகிறது. காதலர்களின் முக்கியமான நாளாக இந்த தழுவுதல் தினம் கருதப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் தழுவுதல் தினம் கொண்டாடப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் தழுவுதல் தினம் என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தழுவுதல் தினம் (Hug Day)
காதலர்கள் தினம் வாரத்தின் 6 வது நாளாக வரும் கட்டியணைக்கும் தினத்தில் நீங்கள் கட்டி அணைக்கும் போது , அன்பு, மகிழ்ச்சி, காதல் வெளிப்படுகிறது. அணைக்கும் போது சுரக்கும்‘ஆக்ஸிடோசின்’ ஹார்மோன் தனிமை, விரக்தி, கோபம் உள்ளிட்ட பலவற்றிற்கு அருமருந்தாகும். உங்கள் அன்புக்குரியோருக்கு நீங்கள் கொடுக்கும் அணைப்பு, நீங்கள் அவர் மேல் எவ்வளவு பிரியத்துடன் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துவதற்கு மிகச்சிறந்த வழி.
பியர் ஹக் எனப்படும் இந்த வகை ஹக்கானது ஆண் மற்றும் பெண் ஆகியோரை அதீதமாக பிணைக்கும் தன்மை கொண்டதாகும். இது உற்சாகமாக கட்டிப்பிடிக்கும் முறை ஆகும். பெண் ஆணின் பின்னிருந்து கட்டிப்பிடிப்பது பேக் ஹக். இதை தவிர ஏகப்பட்ட கட்டிப்பிடி வைத்தியங்கள் உள்ளன.
கட்டியணைக்கும் போது உங்களது சருமம் க்ளோவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதோடு அணைத்தல், வயதான தோற்றத்தை வராமல் தள்ளிப் போதுமாம்.அதோடு மன வலிமையை அதிகப்படுத்தி, நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.