யோகி ஆதித்யநாதை பதற வைத்த கலெக்டர்: அடிச்சாரு பாருங்க ஆர்டரு! அல்லு தெறிக்குது.

By Vishnu PriyaFirst Published Dec 18, 2019, 11:01 AM IST
Highlights

பின்னர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் “துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்தோர், பசு காப்பகங்களில் குறைந்தபட்சம் பத்து பசுக்களுக்கு போர்வை வாங்கி தர வேண்டும். அப்படி வழங்கினால், அவர்களுக்கு உடனடியாக துப்பாக்கி உரிமம் வழங்கப்படும்.” என்பதுதான்.

இந்தியாவை ஆளும் பா.ஜ.க. வி.வி.ஐ.பி.க்களிலேயே உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அளவுக்கு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டும் நபர் வேறு யாருமே இருக்க முடியாது. அவரும் அதற்கு ஏற்ற மாதிரிதான் அதிரடி உத்தரவுகளை அள்ளிவிட்டு, வெச்சு செய்வார். ஆதித்யநாத் மிகப்பெரிய பசு பிரியர். ‘கோமாதா! கோமாதா!’ என்று பசுக்களுக்காக அவர் எடுக்கும் நடவடிக்கைகளும், முயற்சிகளும் அதிரிபுதிரியானவை. மாட்டுக்கறி உண்ண தடை! எனும் விவகாரத்தில் உத்திரபிரதேசம்தான் அதிக கண்காணிப்பை கையாண்டது. அதனால்தான் யோகியை “இவருக்கு மனுஷன் உசுரை விட பசுவின் உசுரு பெருசு!” என்று சீண்டுவார்கள் நெட்டிசன்கள். 

இந்த நிலையில், யோகி ஆதித்யநாத்தே பேயாய் பதறுமளவுக்கு ஒரு உத்தரவை போட்டுள்ளார் ஒரு மாவட்ட கலெக்டர். பசுவை காப்பதில் தன்னையே மிஞ்சி, பல படிகள் முன்னேறிட்டாரே! என்று யோகி, அழுமளவுக்கு அந்த ஆர்டர் அமைந்துள்ளது. அந்த கலெக்டர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை. மாறாக, மத்தியபிரதேசத்தை சேர்ந்த குவாலியர் மாவட்ட கலெக்டர். அவரது பெயர் அனுராக் சவுத்ரி. யோகியையே ஆட வைக்குமளவுக்கு அப்படி என்ன ஆர்டர் போட்டார் அந்த ஆட்சியர்?....அதாவது நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல் மத்தியபிரதேசத்திலும் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. குவாலியர் மாவட்டம் கோலா மந்திர் பகுதியில் அரசாங்கம் நடத்தும் பசுக்கள் காப்பகத்தில் சமீபத்தில் குளிர் தாங்காமல் ஆறு பசுக்கள் இறந்துவிட்டன. இதைத் தொடர்ந்து கலெக்டர் அனுராக் சவுத்ரி பசு காப்பகங்களை பார்வையிட்டார். 

பின்னர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் “துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்தோர், பசு காப்பகங்களில் குறைந்தபட்சம் பத்து பசுக்களுக்கு போர்வை வாங்கி தர வேண்டும். அப்படி வழங்கினால், அவர்களுக்கு உடனடியாக துப்பாக்கி உரிமம் வழங்கப்படும்.” என்பதுதான். வாயில்லா ஜீவனுக்காக கலெக்டர் எடுத்திருக்கும் இந்த முயற்சியை உயிரின ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். அதே போல் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்துக்கும் இந்த தகவல் செல்ல, அவரும் கலெக்டரின் அந்த உத்தரவுக்காக மகிழ்ந்தாராம். இந்த நிலையில் பசுவுக்காக பிரயத்னப்படும் யோகி ஆதித்யநாத்தை காங்கிரஸார்தான் அதிகம் கலாய்பார்கள். ஆனால் இந்த கலெக்டர் பணிபுரியும் ம.பிரதேச மாநிலமோ அதே காங்கிரசின் கையில் உள்ளது. காங்கிரஸின் முக்கிய தலைவரான கமல்நாத் தான் முதல்வர். 

எனவே காங்கிரஸார் சிலர் ‘குவாலியர் கலெக்டருக்கு உத்திரபிரதேசத்தில் வாழ்வதாக நினைப்பா? பசுவுக்காக போர்வையெல்லாம் கேட்கிறார். இது மத்திய பிரதேசம்!’ என்று பாய்ந்தனர். உடனே கலெக்டர் அலுவலக அதிகாரிகளோ...பசுவுக்காக ஆட்சியர் முயற்சி எடுத்ததில் இந்துத்துவ சிந்தனையோ, அரசியலோ இல்லை. வெறும் ஜீவகாருண்யம்தான்! ஏற்கனவே...இதே கலெக்டர் கடந்த ஜூன் மாதம், ‘துப்பாக்கி கேட்டு விண்ணப்பிப்போர் மரக்கன்று ஒன்றை நட்டு, அதனுடன் செல்பி எடுத்து, விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்!’ என்று ஆர்டர் போட்டிருந்ததை ஆதாரமாக காட்டுகின்றனர். 
சபாஷ் கலெக்டர்!

click me!