குரு பெயர்ச்சி: எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாறுகிறார் தெரியுமா ..?

By manimegalai aFirst Published Sep 18, 2018, 5:39 PM IST
Highlights

இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி எப்போது நடக்க உள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க..! மேலும் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது தெரியுமா..?

இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி எப்போது நடக்க உள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க..! மேலும் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது தெரியுமா..?

வாக்கிய பஞ்சாங்கம்:


 
மங்களகரமான விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை அன்று, அதாவது புரட்டாசி மாதமான இந்த  மாதத்தில் வரும் 18-ம் நாளான, தசமியில் சனிபகவான் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில், சரியாக 
10.07-க்கு, துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார்.

துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு அதாவது, விசாகம் 4-ம் பாதத்தில், குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

திருக்கணிக பஞ்சாங்கம் : வரும் 2018 அக்டோபர் மாதம் 11-ம் தேதி

வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி வியாழக்கிழமை 4:49-க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடம் பெயர்ந்து, 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி 2:39 மணி விருச்சக ராசியிலேயே  இருப்பார்.

ஒரு வருட காலம் விருச்சக ராசியில் இருப்பதால், பல நன்மைகள தர உள்ளார். விருச்சக ராசியில் இருந்த குரு அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 29-ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

வேறு எந்த ராசியை குரு பார்கிறார் தெரியுமா ..? 

விருச்சிக ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மீன ராசியையும், ஏழாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஒன்பதாம் பார்வையால் கடக ராசியையும் பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குரு பொதுவாகவே, தான் இருக்கும் இடத்தில் உள்ள ராசியை விட, தான் பார்க்கும் ராசிக்கு பலம் அதிகம் என்பது  கூடுதல் தகவல்.

click me!