கம்பியை கரையான் அரித்து இருக்குமோ? உடைந்து விழுந்த பாலத்திற்கு அதிகாரிகள் கொடுத்த பதில்..!

By ezhil mozhiFirst Published Oct 22, 2019, 2:56 PM IST
Highlights

நேற்று முன்தினம் 20 ஆம் தேதியன்று மேட்டுப்பாளையம் - கோவை நெடுஞ்சாலையில் வீரபாண்டி பிரிவு அடுத்துள்ள திருவள்ளுவர் நகர் அருகே உள்ள பாலம் அடைந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது.

கம்பியை கரையான் அரித்து இருக்குமோ? உடைந்து விழுந்த பாலத்திற்கு அதிகாரிகள் கொடுத்த பதில்..! 

வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் 20 ஆம் தேதியன்று மேட்டுப்பாளையம் - கோவை நெடுஞ்சாலையில் வீரபாண்டி பிரிவு அடுத்துள்ள திருவள்ளுவர் நகர் அருகே உள்ள பாலம் அடைந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதில் என்ன ஒரு அதிசயம்.. மழை வெள்ளத்திற்கு எத்தனையோ இடங்களில் அப்படிதான் நடக்கிறது.. இதை விட மோசமான பாதிப்புகள் ஏற்படுகிறது என நினைக்கலாம். 

ஆனால் தற்போது விழுந்துள்ள இந்த பாலம் கட்டி ஒரு மாதம் மட்டுமே ஆகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த அளவிற்கு உறுதியா கட்டி உள்ளனர் என்று....இதில் குறிப்பாக, பாலம் கட்டி முடித்து 15 நாட்களே ஆன நிலையில் ஒரு நாள் மழைக்கே தாங்காமல்,  சிதைவடைந்து உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் சுமார் 10 அடிக்கு மேல் தடுப்பு சுவர் கட்டப்பட்ட நிலையில் தடுப்பு சுவரின் உள்ளே எந்தவித கம்பிகளும் இல்லாமல் சிமெண்ட் கலவையால் மட்டுமே கட்டப்பட்டுள்ளதும் தெரியவந்து உள்ளது.

இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது,கம்பியை கரையான் அரித்து இருக்குமோ? என பதில் கேள்வி எழுப்பி உள்ளனர்.இப்படி பதில் சொன்னால் இனி வேறு யாரிடம் தான் இந்த குறையை சொல்ல முடியும் என மக்கள் புலம்பி தள்ளி உள்ளனர் மக்கள்.

click me!