சைவ உணவு பிரியர்களா நீங்கள்..? உங்களுக்கு ஓர் ''குட்நியூஸ்".... புற்றுநோய் அபாயம் குறைவா..?

Anija Kannan   | Asianet News
Published : Feb 27, 2022, 08:22 AM IST
சைவ உணவு பிரியர்களா நீங்கள்..? உங்களுக்கு ஓர் ''குட்நியூஸ்".... புற்றுநோய் அபாயம் குறைவா..?

சுருக்கம்

அசைவ பிரியர்களை விட, சைவ உணவு பிரியர்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவு என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அசைவ பிரியர்களை விட, சைவ உணவு பிரியர்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவு என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

 ஒருவரின் உணவு பழக்கம் என்பது அவரவர் விருப்பம். அசைவ உணவை விட சைவ உணவு புற்றுநோய் அபாயம் குறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. புல், பூண்டு சாப்பிடுபவர்கள், உடலில் சத்தே இருக்காது என்றும் சைவத்தை மட்டம் தட்டி, தங்கள் உணவை பெருமையாக நினைக்கும் அசைவக்காரர்களுக்கு இது கொஞ்சம் வருத்தமான செய்தியாக இருக்கலாம்.

சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் குறைவு என்று தெரியவந்துள்ளது.

மிகவும் துல்லியமாகச் சொல்வதென்றால் சைவ உணவு உண்ணும் பேஸ்கேட்டேரியன்கள் (pescatarians) எனப்படும் இறைச்சியில் மீன் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு பிறரை விட  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 14 சதவீதம் குறைவாக உள்ளது.

இது தொடர்பாக, சுமார்  480,000 க்கும் மேற்பட்ட பிரிட்டன் மக்களிடம் ஆய்வு செய்தனர். அதில், சைவ பிரியர்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், இறைச்சி உண்பது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பது இந்த ஆய்வின் அர்த்தம் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆக்ஸ்போர்டின் மக்கள்தொகை சுகாதார புற்றுநோய் தொற்றுநோயியல் பிரிவைச் (Oxford’s population health cancer epidemiology unit) சேர்ந்த கோடி வாட்லிங் தலைமையிலான குழு, புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் உடல் கொழுப்பு உள்ளடக்கம் போன்ற காரணிகளும் புற்றுநோயின் அபாயத்தை தீர்மானிப்பதில் பங்கு வகிக்கிறது என்று கூறியது.

சரி, உணவை சைவ உணவு என்ற வரையறைக்குள் கொண்டு வரும் காரணிகள் என்ன? மீன் சைவம் தான் என்று சொல்லும் பெங்காலிகளும் உண்டு. முட்டையைக் கூட அசைவத்தில் சேர்ப்பவர்களும் உண்டு.

ஆனால், உலக அளவில் பொதுப்படையாக, சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. இறைச்சி, கடலுணவு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்து, நிலத்தில் விளையும், காய்கறிகள், தானியங்கள் அனைத்தும் சைவமாக கருத்தப்படுகிறது. 

விலங்குகளில் இருந்து பெறப்படும் பால் சைவ உணவா அசைவ உணவா என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

சைவ உணவை சாப்பிடுபவர்களுக்கு எந்ததெந்த வழிமுறைகளில் சாத்தியம்..!
 
1. ஒரு வாரத்தில் ஐந்து முறைக்கு குறைவாக இறைச்சி உண்பவர்களுக்கு குடல் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் 9% குறைவு.

2. சைவ உணவு உண்ப பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 18% குறைவு.

3. சைவ உணவு உண்பவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் 31% குறைவு.

4. சைவ உணவுகள் மற்றும் மீன் மட்டுமே ஆண்களில், புரோஸ்டேட் புற்றுநோயை உருவாக்கும்ஆபத்து 20 சதவீதம் குறைவு.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்