தங்கம் விலை மீண்டும் உயர்வு..!

By ezhil mozhiFirst Published Oct 11, 2019, 6:46 PM IST
Highlights

பொதுமக்கள் தங்கம் வாங்க இது சரியான தருணமா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர். 

தங்கம் விலை மீண்டும் உயர்வு..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக சில சமயங்களில் விலை சரிந்து காணப்பட்டு வருகிறது. சென்ற மாதம் தங்கம் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. பின்னர் மீண்டும் சரியத் தொடங்கிய தங்கம் விலை இடையே இடையே அவ்வப்போது குறைந்து விற்பனையாகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்கம் வாங்க இது சரியான தருணமா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தீபாவளி நெருங்குவதால் தங்கம் விலை மெல்ல மெல்ல அதிகரித்து 30 ஆயிரத்தை நெருங்கும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த ஒரு தருணத்தில் இன்று சவரன் விலை குறைந்து உள்ளது. அதாவது இன்றைய காலை நேர நிலவரப்படி...

கிராமுக்கு 32 ரூபாய் குறைந்தும், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து104 ரூபாய்க்கு விற்கப்டுகிறது.

மாலை நேர நிலவரப்படி. 

கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்தும், சவரனுக்கு 90 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 224 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 50 பைசா அதிகரித்தும் 49.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  
 

click me!