மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை...!

Published : Oct 03, 2019, 12:42 PM IST
மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை...!

சுருக்கம்

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியதிலிருந்து தங்கம் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டது.  

மீண்டும் சரசரவென உயர்ந்த தங்கம் விலை...!  

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த வந்த நிலையில் தற்போது மீண்டும்  அதிரடியாக விலை உயர்ந்து உள்ளது

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியதிலிருந்து தங்கம் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டது.

பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இதற்கு முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்ததன் மூலம் சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதாவது செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 33 ஆயிரம் 34 ஆயிரம் வரை ஆனது.

இந்த நிலையில் மீண்டும் குறைய தொடங்கிய தங்கம் விலை தற்போது 28 ஆயிரத்து தாண்டி விற்பனையாகி வருகிறது. அவ்வாறு பார்த்தால் தற்போதைய நிலவரப்படி செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 31 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உருவாகியுள்ளது.

அதன்படி இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதே போன்று வெள்ளி கிராமுக்கு 1.20 அதிகரித்து 49.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Back Pain : காலையில தூங்கி எழுந்ததும் முதுகு வலியா? இதான் காரணம்; உடனே மாத்திக்கங்க!
இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்