எப்படியோ... சட்டென குறைந்தது தங்கம் விலை..! அட்லீஸ்ட் இந்த அளவுக்காவது குறைந்ததே..!

By ezhil mozhiFirst Published Sep 13, 2019, 12:28 PM IST
Highlights

22 Ct ஆபரண தங்கம் ஒரு கிராம் (-7) ரூபாய்  குறைந்து, 3607.00 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்தும் 28 ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது

எப்படியோ...சட்டென குறைந்தது தங்கம் விலை..! அட்லீஸ்ட் இந்த அளவுக்காவது குறைந்ததே..! 

தொடர்ந்து கடந்த 5 நாட்களாக  தங்கத்தின் விலை தொடர் சரிவை நோக்கி உள்ளது. சென்ற வாரம் சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வந்த நிலையில் இன்றும்  சற்று குறைந்து உள்ளது. 

இருப்பினும் இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து குறைந்தது 32 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கம் வாங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு கூட தங்கம் வாங்க பெரும் தயக்கம் காண்பிக்கின்றனர். இருந்த போதிலும் தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாது என்பதால்..15 சவரன் தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் 12 சவரன் நகை வாங்கினால் போதுமானது என்ற மன நிலைக்கு வந்துள்ளனர். 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 7  ருபாய் குறைந்து தங்கம் விற்பனையாகிறது.

காலை நேர நிலவரப்படி, 

22 Ct ஆபரண தங்கம் ஒரு கிராம் (-7) ரூபாய்  குறைந்து, 3607.00 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்தும் 28 ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது

வெள்ளி விலை நிலவரம்

கிராமுக்கு 70 பைசா குறைந்து  50.50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

click me!