
பயங்கரமா ஜம்ப்பானது தங்கம் விலை..! கதறும் மக்கள்..!
தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை 28 ஆயிரத்தை நெருங்க உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்று ஓரே நாளில் கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்தும், சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து உள்ளது .
காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ.3487.00 (27 ரூபாய் அதிகரிப்பு). சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 27 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்.!
ஒரு கிராம் வெள்ளி 10 பைசா குறைந்து, 45.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஏற்கனவே தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், சவரன் விலை மிக விரைவில் 28 ஆயிரத்தையும் நெருங்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.