சவரனுக்கு வெறும் ரூ.32 தான் குறைவு..! தங்கம் விலை மீண்டும் குறையவே குறையாதா...? மக்கள் எதிர்பார்ப்பு...!

Published : Dec 05, 2019, 06:11 PM IST
சவரனுக்கு வெறும் ரூ.32 தான் குறைவு..! தங்கம் விலை மீண்டும் குறையவே குறையாதா...? மக்கள் எதிர்பார்ப்பு...!

சுருக்கம்

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

சவரனுக்கு வெறும் ரூ. 32 தான் குறைவு..! தங்கம் விலை மீண்டும் குறையவே குறையாதா...? மக்கள் எதிர்பார்ப்பு...! 

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.4 குறைந்து உள்ளது 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி,தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.4 குறைந்து 3644.00 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 152 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து 47.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தங்கம் விலை  உயர்வை பொறுத்தவரையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனால் எப்போது குறைய வாய்ப்பு உள்ளது என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

LPG Saving Tips: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? பாதி கேஸில் சமைக்கலாம்! இதோ 8 சூப்பர் டிப்ஸ்
Summer Foods: வெயில் சுட்டெரிக்குதா? உடம்பை கூல் ஆக்க இந்த உணவுகள் போதும்!