இன்னும் 6 மாதம் தான்..! மெரினா கடற்கரை என்னவாகப்போகுது தெரியுமா..?

Published : Dec 05, 2019, 04:32 PM IST
இன்னும் 6 மாதம் தான்..! மெரினா கடற்கரை என்னவாகப்போகுது தெரியுமா..?

சுருக்கம்

வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது போன்ற வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் இவ்வாறு ஆணை பிறப்பித்து உள்ளது. கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்ற வேண்டும்  என்றும், விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர் 

இன்னும் 6 மாதம் தான்..! மெரினா கடற்கரை என்னவாகப்போகுது தெரியுமா..? 

அடுத்த 6 மாதங்களில் மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும்  என சென்னை நகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது குறித்து பதில் அளிக்க வரும் 13 ஆம் தேதி வரை மாநகராட்சி காவல் துறைக்கு கால அவகாசம் கொடுத்து உள்ளது 

வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது போன்ற வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் இவ்வாறு ஆணை பிறப்பித்து உள்ளது. கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்ற வேண்டும்  என்றும், விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர் 

மேலும்  கடற்கரையின் அழகை மறைக்கும் கடைகளை ஒரே நேர்கோட்டில் அமைக்க ஆயத்தபடுத்துமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடற்கரையை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் குப்பைகளை அகற்றாமல் அசுத்தமாக வைத்திருக்கும் வியாபாரிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

உலகிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்டிருப்பது மெரினா கடற்கரை என்பது  குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த கடற்கரை என்றால் அது மெரினா கடற்க்கரை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு தருணத்தில், அடுத்து வரும் 6 மாதத்தில், மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்த உள்ளது வினீத்கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய நீதிபதி அமர்வு. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்