குறைந்தது தங்கம் விலை..! சவரன் விலை எவ்வளவு தெரியுமா..?

Published : Jan 02, 2020, 11:45 AM IST
குறைந்தது தங்கம் விலை..! சவரன் விலை  எவ்வளவு தெரியுமா..?

சுருக்கம்

தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர்.

குறைந்தது தங்கம் விலை..! சவரன் விலை  எவ்வளவு தெரியுமா..?

இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.3 குறைந்து உள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.3 குறைந்து 3732.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 24 குறைந்து 29 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி ஒரு கிராம்  50.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு தங்கம் விலை மேலும் அதிகரிக்க கூடும் என தமிழகத்தின் தங்க நகை வியாபாரிகள் சம்மேளன தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். அதன்படி உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக தங்கத்தின் விலை தற்போது குறைய வாய்ப்பே இல்லை என்றும்  தற்போது இருக்கும் விலையைவிட அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

லேட்டஸ்ட் ஜிமிக்கி டிசைன்ஸ்.. செம கலெக்ஷன்ஸ்.. பார்த்தா அசந்துடுவீங்க!
Tender Coconut: நிறைய தண்ணி இருக்குற இளநீரை எப்படி வாங்குவது? சிம்பிள் டிப்ஸ் இதோ!