இன்னும் 200 ரூபாய் உயர்ந்தால்... ஒரு சவரன் 33 ஆயிரம்..! செய்கூலி சேதாரம் சேர்த்து 38 ஆயிரம்..!

By ezhil mozhiFirst Published Feb 24, 2020, 11:18 AM IST
Highlights

சவரன் விலை 33 ஆயிரத்தை நெருங்க உள்ளதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 38 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 200 ரூபாய் உயர்ந்தால்... ஒரு சவரன் 33 ஆயிரம்..! செய்கூலி சேதாரம் சேர்த்து 38 ஆயிரம்..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.28 உயர்ந்து 4100.00 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 224 உயர்ந்து 32 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

சவரன் விலை 33 ஆயிரத்தை நெருங்க உள்ளதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 38 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 50 பைசா அதிகரித்து 52.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இனி வரும் காலங்களில் அதிக சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாத சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து பெருகி வரும் தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் மனா  வருத்தம் அடைந்து உள்ளனர்.

ஆண்மை விஷயத்தில் செம்ம மாஸ் காட்ட வேண்டுமா..? இதோ இருக்கு கையிலேயே அல்வா..! எடுத்துக்கோங்க...!

எந்த ஒரு சுப நிகழ்வுகளுக்கும் தங்கம் அத்தியாவசிய ஒன்று என்பதால், தங்கம் வாங்குவதை  தவிர்க்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும்  சவரன் 33 ஆயிரத்தை நெருங்க உள்ளதால் பெரும்  அதிருப்தியில் உள்ளனர் மக்கள்.

இது தவிர, உலக பொருளாதாரத்தில் நிலவவும் மந்தமான நிலைமை காரணமாக இந்த ஆண்டு  இறுதிக்குள் மேலும் சவரன் விலை உயர்ந்து  35 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளது என  ஏற்கனவே பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!