இந்தியாவின் பல மாநிலங்களில் செய்யப்படும் மாதவிடாய் தொடர்பான சில பழக்கவழக்கங்களைப் பற்றி பார்க்கலாம்.
மாதவிடாய் என்பது இயற்கையான செயல். ஆனால் ஒரு சிறுமிக்கு முதல்முறை மாதவிடாய் வரும் போது அச்சிறுமி பருவமடைவதாக அல்லது அவள் வயதுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில், மாதவிடாய் காலத்தில் சிறுமி தீண்டத்தகாதவளாக கருதப்படுகிறாள். மறுபுறம், பெண்கள் பருவமடையும் நிகழ்வை கொண்டாடும் பல மாநிலங்கள் உள்ளன. தென் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் ஒரு சிறுமி பருவமடையும்போது விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுவது மிகவும் பொதுவானது. அந்த வகையில் இந்தியாவின் பல மாநிலங்களில் செய்யப்படும் மாதவிடாய் தொடர்பான சில பழக்கவழக்கங்களைப் பற்றி பார்க்கலாம்.
கர்நாடகா :
கர்நாடகாவில் ஒரு சிறுமி பருவமடையும் போது ரிதுசுத்தி என்ற சடங்கு நடத்தப்படுகிறது. அப்போது அச்சிறுமி பாவாடை தாவணி அணிந்திருக்க வேண்டும். வயதுக்கு வந்தால் மட்டுமே அங்கு பெண்கள் தாவணி அணிய முடியும். திருமணம் வரை அரை சேலை மட்டுமே அணிய வேண்டும். முற்காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான விஷயங்களை ரிதுசுத்தி சடங்கு மூலம் தெரியப்படுத்துவார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழ்நாடு :
தமிழ்நாட்டில் ஒரு சிறுமிக்கு முதல் முறை மாதவிடாய் ஏற்படும் நிகழ்வு ஒரு விழா போல் கொண்டாடப்படுகிறது. ஒரு சிறுமி பருவடைந்து விட்டால் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்படும். இதில், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்துகொள்வார்கள் இந்த வழக்கத்தில், பெண்ணின் தாய் மாமன் அவருக்கு புது பட்டுப்புடவை, நகைகள் உள்ளிட்ட பொருட்களை சீர் பொருட்களாக வைப்பார். வயதுக்கு வந்த சிறுமியை மஞ்சள் நீரால் குளிப்பாட்டி தனி குடிசையில் தங்க வைப்பார்கள். பின்னர் 9, 11, 15-வது நாட்களில் புண்ணியதானத்துடன் இந்த விழா நிறைவடைகிறது.
ஒடிசா :
ஒடிசாவில் சிறுமிகள் பருவமடையும் நிகழ்வு ராஜ பிரபா என்று அழைக்கப்படுகிறது. அதாவதுமாதவிடாய் வரும் பெண்கள் இந்தியில் ரஜஸ்வாலா என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த மூன்று நாட்களில் பூமி தாய்க்கு மாதவிடாய் வரும் என்று ஒடிசா மக்கள் நம்புகிறார்கள். மாதவிடாய் ஏற்பட்ட நான்காவது நாளில் சிறுமியை குளிப்பாட்டி, 'மிதுன் சங்கராந்தி' என்ற மற்றொரு சடங்கை செய்வார்கள். மேலும் அந்த பெண்களுக்கு புதிய ஆடைகள் அணிவிக்கப்படும்.
முன்பை விட அதிகமாக பிறக்கும் இரட்டையர்களின் உச்சம்.! காரணம் இதுதான்...
ஆந்திர பிரதேசம் :
ஆந்திரப் பிரதேசத்தில், ஒரு பெண்ணுக்கு முதன்முறையாக மாதவிடாய் வரும்போது, 'பெத்மனிஷி பண்டகா' என்ற சடங்கு நடத்தப்படுகிறது. இந்த சடங்கு அவரது மாதவிடாய் முதல், ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. முதல் நாளே 'மங்கள் ஸ்னான்' என்ற சடங்கு செய்யப்படுகிறது. அப்போது சிறுமியை ஐந்து பெண்கள் குளிப்பாட்டுகிறார்கள், அதில் சிறுமியின் தாய் இருக்கக்கூடாது. மாதவிடாய் காலத்தில் சிறுமிக்கு தனி அறை ஏற்பாடு செய்யப்படும். இந்த காலகட்டத்தில் சிறுமி எங்கும் செல்ல தடை கூடாது . 'பெத்மனிஷி பண்டக' விழா தொடரும் நாட்களில் சிறுமியின் சாப்பாடு முதல் மெத்தை வரை அனைத்தும் தனியாக வழங்கப்படும். கடைசி நாளில் சிறுமிக்கு, அவரின் மாமா புதிய புடவை மற்றும் நகைகளை பரிசாக அளிப்பார்..