நீங்கள் அலுவகத்தில் வேலை செய்யும் பெண்ணாக இருந்தால் குழந்தைகளை எப்படி சமப்படுத்துவது என்று இங்கு பார்க்கலாம்..
இன்றைய காலகட்டத்தில், பொருளாதார நெருக்கடி காரணமாக ஆண் , பெண் என இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். இன்னும் சொல்லபோனால் பல பெண்கள் வேலைக்கு சென்றாலும் குழந்தைகளையும் நன்றாக ககவனித்துக் கொள்கிறார்கள்.. இருந்தாலும், இந்த இரண்டு பணிகளையும் பேலன்ஸ் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஏனெனில், இவை இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியாமல் வேலையை விட்டவர்கள் ஏராளம். வேலையை விட்ட பிறகு... அச்சச்சோ.. தேவையில்லாமல் வேலையை விட்டுவிட்டேன் என்றும், தொழில் முடிந்துவிட்டதாகவும் உணர்கிறார்கள். ஆனால்... கீழே கொடுக்கப்பட்டுள்ள வித்தைகளை பின்பற்றினால் அந்த உணர்வு வராது. எனவே, இப்போது அலுவலக வேலை செய்யும் பெண்கள் குழந்தைகளை எப்படி பேலன்ஸ் செய்வது என்று பார்க்கலாம்..
சுய அக்கறை அவசியம்: நீங்கள் வேலை செல்லும் பெண்ணாக இருந்தால், குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்ள விரும்பினால், முதலில் உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். அதற்கு தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா போன்ற நல்ல பழக்கங்களை நடைமுறைப்படுத்துங்கள். இதனால் உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இதையும் படிங்க: பெற்றோர்களே.. இதை ஒருபோதும் உங்கள் குழந்தைகள் முன் செய்யாதீங்க..
எதிர்பார்ப்புகள்: அலுவலக வேலைகள் மற்றும் வீட்டுப் பொறுப்புகளை கவனிக்கும் போது, உங்கள் மீது நீங்கள் வைக்கும் எதிர்பார்ப்புகள் யதார்த்தமானவை என்பதை உறுதி செய்யுங்கள். சினிமாவில், ஹீரோயின்கள் செய்வது போல் எல்லாம் செய்ய முடியாது. எனவே, உங்கள் தலையில் அதிக வேலையை சுமக்காதீர்கள். உங்களால் முடிந்தவரை மட்டும் செய்யுங்கள்.
இதையும் படிங்க: பெற்றோர்களே.. குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் முன் இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
பிற ஆதரவு: எந்த வேலையும் தனியாக செய்வது கடினம். மறுபுறம் நீங்கள் ஒரு தொழில் மற்றும் தாய்மை இரண்டையும் கொண்டிருக்க விரும்பினால், உங்களுக்காக ஒரு ஆதரவு அமைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு விஷயத்திலும் நண்பர்கள், குடும்பத்தினர் என யாராவது உங்களுக்காக இருப்பதை உறுதி செய்யுங்கள். தொழில் மற்றும் குழந்தைகள் இரண்டையும் சமநிலைப்படுத்த உங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவதில் அவர்கள் உங்களுடன் இருந்தால், உங்கள் வேலை எளிதாக முடியும்.
வேலை நேரம்: அலுவலக வேலை நேரம் நெகிழ்வாக இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில், அப்படிப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள உங்களுக்கும் நேரம் கிடைக்கும். இதனால், அலுவலக வேலை மற்றும் வீட்டுப் பொறுப்புகளை முறையாக கையாள முடியும்.
நேர மேலாண்மை: தொழில், தாய்மை இரண்டையும் அனுபவிக்க நேர மேலாண்மை மிகவும் அவசியம். நேர மேலாண்மை தெரிந்தால், இவை இரண்டையும் திறம்பட சமன் செய்யலாம். எதற்கு, எப்போது எவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இரண்டில் எது முதன்மையானது என்பதும் தெரிந்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களால் இரண்டையும் எளிதாக சமன் செய்ய முடியும்.
தொடர்பு: வீடாக இருந்தாலும் சரி அலுவலகமாக இருந்தாலும் சரி.. தொடர்பு மிகவும் முக்கியமானது. உங்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கும்போது, உங்கள் சக ஊழியர்களிடமும் குடும்பத்தினரிடமும் நீங்கள் பேச வேண்டும். சொல்லாமல் யாராலும் புரிந்து கொள்ள முடியாது. எனவே... திறந்த தொடர்பு முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் செய்யும் இரண்டு பணிகளிலும் நீங்கள் சிறந்தவர் என்று நிரூபிக்க முயற்சிக்காதீர்கள். முதலில், நீங்கள் செய்வதை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D