ஆறே நாளில் ரூ.19 ஆயிரம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்த பிளிப்கார்ட், அமேசான்

By Selvanayagam PFirst Published Oct 9, 2019, 8:52 PM IST
Highlights

பண்டிகை கால சிறப்பு விற்பனை வாயிலாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மொத்தம் ரூ.19 ஆயிரம் கோடிக்கு பொருட்களை சகட்டுமேனிக்கு விற்று தள்ளி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம் நாட்டில் தற்போது ஆன்லைன் வர்த்தகம் அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது. அனைவரும் கையிலும் மொபைல் போன் வந்துவிட்டதும் இதற்கு முக்கிய காரணம். சாதரண பென்சில் முதல் விலையுர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் வரை ஆன்லைனில் கிடைக்காத பொருட்களே இல்லை என்ற நிலை வந்து விட்டது. 

நம் நாட்டில் பொதுவாக பண்டிகை காலத்தில் பொருட்கள் விற்பனை படுஜோராக இருக்கும். தற்போது அதனை மனதில் வைத்து பண்டிகை கால சிறப்பு விற்பனையை நடத்தி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நல்ல காசு பார்த்து வருகின்றன.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் ஆன்லைன் வர்ததக நிறுவனங்கள் பிளிப் கார்ட் மற்றும் அமேசான் மேற்கொண்ட விழா கால விற்பனையை சொல்லலாம். 
கடந்த மாதம் 29ம் தேதி முதல் கடந்த 4ம் தேதி வரை இந்த நிறுவனங்கள் பண்டிகை கால சிறப்பு விற்பனை நடத்தின. இந்த 6 நாளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்களை அந்த நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.

ஆலோசனை நிறுவனமான ரெட்சீர் நிறுவனத்தின் அறிக்கையின்படி, சமீபத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நடத்திய விழாக்கால சிறப்பு விற்பனையில் மொத்தம் ரூ.19 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனையாகியுள்ளது. 

மொத்த வணிக அளவு அடிப்படையில் பார்த்தால் பிளிப்கார்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது..

click me!