ஆசிரியர்களுக்கு படு குஷியான செய்தி..! கேட்டபடியே தீபாவளி லீவு அறிவிச்சுட்டாங்க ..!

Published : Oct 09, 2019, 06:37 PM IST
ஆசிரியர்களுக்கு படு குஷியான செய்தி..! கேட்டபடியே தீபாவளி லீவு அறிவிச்சுட்டாங்க ..!

சுருக்கம்

இந்தாண்டு ஞாயிற்றுக் கிழமை வரும் தீபாவளி பண்டிகையை மன உளைச்சல் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் , தீபாவளிக்கு மறுநாளான திங்கட் கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்த விவரம்..

ஆசிரியர்களுக்கு படு குஷியான செய்தி..! கேட்டபடியே தீபாவளி லீவு அறிவிச்சுட்டாங்க ..! 

தீபாவளிக்கு முந்தைய நாளான 26ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தாண்டு ஞாயிற்றுக் கிழமை வரும் தீபாவளி பண்டிகையை மன உளைச்சல் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் , தீபாவளிக்கு மறுநாளான திங்கட் கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்த விவரம்..

"இந்த வருடம் தீபாவளி எதிர்வரும் 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பெரும்பாலும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் வேலை செய்வதில்லை.பல்வேறு மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில் பணிபுரிந்துவருகிறார்கள். அனைவரும்  தீபாவளி நாளினை கொண்டாடிவிட்டு அன்றே வெளியூரிலிருந்து பணிக்குத் திரும்புவது மிகவும் சிரமம் ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும்  அது ஏற்படுத்தும். தீபாவளி நன்னாளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் தீபாவளி மறுநாளான திங்கள் கிழமையினை விடுமுறை நாளாக அறிவிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறது.

மேலும் 28.10.2019 திங்கள் கிழமையினை ஈடு செய்திடும் பொருட்டு  அரசு அறிவிக்கும் ஏதாவது ஒரு விடுமுறை  நாளான சனிக்கிழமையன்று பணி செய்து ஈடுசெய்கின்றோம். எனவே ,மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பரிசீலித்து தீபாவளி மறுநாள் 28.10.2019 அன்று விடுப்பு வழங்கிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோர் என்று கூறியுள்ளனர்"

ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 26 ஆம் தேதி விடுமுறை அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆசிரிய பெருமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்