உங்கள் துணை உண்மையில் உங்களை காதலிக்கிறாரா இல்லையா? என்பதை சில விஷயங்களை வைத்து நம்மால் அடையாளம் காண முடியும் என்று கூறுகின்றனர் மனோதத்துவ நிபுணர்கள். அந்த விஷயங்கள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.
கணவன் மனைவி என்ற உறவை தாண்டி, காதலில் இருக்கும் பலருக்கு, தங்கள் துணை உண்மைலேயே தன்னை காதலிக்கிறார்களாக? இல்லை சிறு சண்டை வந்தாலும் நம்மை விட்டு விலகிச்சென்று விடுவார்களாக என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கும். சரி அதை எப்படி கண்டறிவது? முதலாவதாக, உங்கள் துணை உங்களுடைய எதிர்காலத்தை குறித்த பல கேள்விகளையும், உங்கள் எதிர்கால நலன் குறித்த கேள்விகளையும் அடிக்கடி உங்களிடம் கேட்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்கள் உங்களை விட்டு செல்ல மனமில்லாதவர்கள் என்று தான் அர்த்தம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
மேலும் உங்கள் துணை, உங்களுடைய வாழ்க்கையை பற்றி அதீத கவலையும், அதேபோல நீங்கள் சந்தோஷப்படும் நேரத்தில் உங்களோடு இணைந்து சந்தோஷமடைந்தார் என்றால் நிச்சயம் அவர் உங்களை முழு மனதுடன் நேசிப்பவராகிறார்.
உங்கள் துணை, வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளை வரவேற்று, அதற்கு தன்குந்தார்போல வாழ தயாராக உள்ளார் என்றால், நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலி என்று கூறவேண்டும்.
Vastu For Money : உங்கள் வீட்டில் வருமானம் குறையாமல் இருக்க பணத்தை வீட்டில் இப்படி வையுங்க..!!
தன் மனதுக்குள் ஒரு விஷயத்தை வைத்து பூட்டாமல், அதை என்ன விஷயமாக இருந்தாலும் உங்களோடு பஃறிந்துகொள்கிறார் என்றால் நிச்சயம் அந்த துணை உங்களை அதிக அளவில் நம்பி உங்களோடு பயணிக்க விரும்புகிறார் என்று தான் அர்த்தம்.
நீங்கள் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது (அனைத்து ரீதியாகவும்), உங்களை மனம்தளரவிடாமல், உங்களுக்காக உடன் நிற்கிறார் என்றால், நிச்சயம் அவர் உங்களை அதீதமாக நேசிக்கிறார் என்று தான் அர்த்தம்.
ஒருவருக்கு ஒரு எல்லைகள் எதுவுமே இல்லாமல் நம்பிக்கை வைக்க துவங்கிவிட்டால் போதும், உங்கள் வாழ்க்கை எந்த நிலையிலும் தடம் புரளாது, ஆகையால் உங்களை நம்பும் துணையை, நீங்களும் நம்புவதே சிறந்தது. மேற்குறிய தகவல்கள் மனோதத்துவ நிபுணர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.