சென்னையில்... காதலர்கள் ஒன்று கூட உள்ள 8 இடங்கள்! போக மிஸ் பண்ணீடாதீங்க!

By manimegalai aFirst Published Feb 13, 2020, 1:17 PM IST
Highlights

உங்கள் காதலர் / காதலியோடு, கூடி இருக்கும் புறாக்கள் நடுவில்... கடலில் இருந்து, செக்க சிவந்த ரோஜாவை போல் மெல்ல மெல்ல மேலே வரும் சூரியனை, உங்கள் காதலன் - காதலியோடு கை பிடித்து பார்ப்பதே தனி அழகு.
 

மெரினா பீச்

உங்கள் காதலர் / காதலியோடு, கூடி இருக்கும் புறாக்கள் நடுவில்... கடலில் இருந்து, செக்க சிவந்த ரோஜாவை போல் மெல்ல மெல்ல மேலே வரும் சூரியனை, உங்கள் காதலன் - காதலியோடு கை பிடித்து பார்ப்பதே தனி அழகு.

கிண்டி நேஷனல் பார்க்:

பார்க்கவே பச்சை பசேல் என இருக்கும் பறந்து விரிந்த இடங்களில்... பார்க்கும் இடமெல்லாம், மான், மயில், குரங்கு, என சின்ன சின்ன விலங்குகள் கூடி இருக்கும் இந்த இடத்திற்கு உங்கள், காதலன் - காதலியோடு சென்று நீங்கள் அவருக்கு கொடுக்க விரும்பும் அன்பு பரிசை கொடுத்தால்... அது வேற லெவல் பீல்.

முட்டுக்காடு:

உங்கள் மனம் கவர்ந்த காதலன் - காதலியோடு, படகு சவாரி செய்ய யாருக்கு தான் பிடிக்காது. இளையராஜா பாடல்கள் பின்னல் ஓட, உங்களின் வருங்கால துணையோடு சில் என இருக்கும் தண்ணீரில்... மெல்லமாய் போகும் பயணத்தை கண்டிப்பாக மிஸ் பண்ணிடாதீங்க.

மகாபலிபுரம்:

கண்களை கவரும் கலை சிற்பங்கள் சூழ, அனைவரும் வியர்த்து பார்க்கும் வெண்ணை உருண்டையின் கீழ் நின்று உங்கள் வருங்கால துணையின் கை பிடித்து உங்கள் காதலை மேலும் அதிகமாக்கி இந்த வருட காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.

புலி குகை:

மகாபலிபுரம் அருகிலேயே அமைத்திருக்கும், புலி முகம் கொண்ட குகை தான் புலி குகை. கொஞ்சம் திகிலோடு, அழகு சிற்பங்கள் நிறைந்த இந்த இடத்தை, உங்கள் காதலன் - காதலியோடு சென்று பாருங்கள். கண்டிப்பாக மிஸ் பண்ணிடாதீங்க.

கோவளம் பீச்:

பறந்து விரிந்த பீச்சை பார்த்து உங்களுக்கு கொஞ்சம் போர் அடித்திருந்தால், காம்பக்ட்டாக குட்டியாக இருக்கும் கோவளம் பீச்சுக்கு போங்க. அங்கு சுட சுட ,மிகவும் பிரெஷ்சாக விற்கும் மீன், இறால், உங்கள் காதலன் - காதலிக்கு பிடித்தால் வாங்கி கொடுக்க மறக்காதீங்க.

வண்டலூர் உயிரியல் பூங்கா:

வண்ண வண்ண மலர்கள்... எங்கு பார்த்தாலும் மரம், விலங்குகள் என உள்ளே சென்றதுமே சந்தோஷத்தை அல்லி தரும் வண்டலூர் பூங்காவிற்கு செல்ல மறக்காதீர்கள்.

பெசன்ட் நகர் பீச்:

பறந்து விரிந்த மணல்... குளு குளு காத்து எங்கு பார்த்தாலும் கடைகள் என மினுமினுபோடு இருக்கும் பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்று கடலின் அழகை உங்கள் துணையோடு பார்த்தல் தனி சுகம் தான்.

click me!