பிப்ரவரி மாதத்தில் பிறந்தவங்களோட குணம் தெரியுமா? பெருமைக்கு சொல்லல.. இவங்க குணம் தெரிஞ்சா காதலிச்சிடுவீங்க!

Published : Jan 31, 2023, 01:20 PM ISTUpdated : Jan 31, 2023, 01:31 PM IST
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவங்களோட குணம் தெரியுமா? பெருமைக்கு சொல்லல.. இவங்க குணம் தெரிஞ்சா காதலிச்சிடுவீங்க!

சுருக்கம்

காதலர்களின் கொண்டாட்ட மாதமான பிப்ரவரியில் பிறந்தவர்களின் குணம் என்ன? அவர்களின் இயல்பின் 7 பண்புகள் என்ன என்பதை இங்கு காணலாம். 

வருடத்திற்கு 12 மாதங்கள் உள்ளன. அதில் பிப்ரவரியில் பிறந்தவர்கள் மற்ற மாதங்களில் பிறந்தவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்கள்? என்பதை அறிந்து கொள்வது மிக சுலபம். நீங்களோ/ உங்கள் துணையோ பிப்ரவரியில் பிறந்தவராக இருந்தால் அவர்களின் தனிப்பட்ட குணநலன்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

பிப்ரவரியில் பிறந்தவர்களின் ஆளுமை 

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலானோர் பிறந்த தேதியின் அடிப்படையில் கும்பம் அல்லது மீனம் ராசியைக் கொண்டுள்ளனர். இவர்கள் மற்ற ராசிக்காரர்களைப் போலவே, தங்கள் சொந்த குணநலன்களை கொண்டிருந்தாலும், மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். சிறப்பு வாய்ந்தவர்கள். 

பணம் 

இவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனையே இல்லை. பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலிகள். செல்வ செழிப்போடு பிறந்தவர்கள். இவர்களுக்கு புகழ்ச்சி பிடிக்கும். தாங்கள் எங்கு சென்றாலும் மக்கள் அவர்களைப் பற்றி பேச வேண்டும் என ஆசைப்படுவார்கள். 

விசுவாசமானவர்கள் 

இன்றைய காலக்கட்டத்தில் நம்பிக்கைக்கு உரிய நபர்களை கண்டறிவது கடினம். ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி பிப்ரவரியில் பிறந்தவர்கள் தங்கள் உறவுகளுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். காதலன்/காதலி, குடும்பம், நண்பர்கள் உறவாக இருந்தாலும், இவர்கள் 100% தங்கள் பிரியமானவர்களிடம் மிகவும் நேர்மையாக இருப்பார்கள். இவர்களை தாராளமாக நம்பலாம். அவர்களுடன் நீங்கள் எந்த தயக்கமும் இல்லாமல் எதையும் பகிர்ந்து கொள்ளலாம். ரகசியங்கள் கசியாது. 

நேரடியானவர்கள் 

பிப்ரவரியில் பிறந்தவர்கள் நேரடியான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் மிகவும் வெளிப்படையாக இருப்பார்கள். உங்களைப் பற்றி ஏதாவது சொல்ல விரும்பினால், அதை உங்கள் முகத்தில் நேராக சொல்வார்கள். கடினமான சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கும், அதிலிருந்து ஒரு வசதியான மற்றும் எளிதான வழியைக் கண்டுபிடிப்பதற்கும் அவர்களுக்கு தெரியும். நீங்கள் அவர்களை சரியாக நடத்தினால், அவர்கள் எப்போதும் உங்கள் பக்கத்தில் நிற்பார்கள். 

புதுமையான சிந்தனை உடையவர்கள் 

இவர்கள் உண்மையிலேயே ஆக்கப்பூர்வமானவர்கள். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், அறிவைச் சேகரிக்கவும் விரும்புகிறார்கள். இவர்கள் எந்தத் துறையில் அல்லது தொழிலில் பணிபுரிந்தாலும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவார்கள். பிப்ரவரியில் பிறந்த பெரும்பாலானவர்கள் கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், படைப்பாற்றல் கொண்ட வடிவமைப்பாளர்கள், தொழில்முனைவோர் தான். பல சிறந்த விஞ்ஞானிகள், தொழில்முனைவோர் இந்த மாதத்தில் தான் பிறந்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாத பெண்கள்... உடலுறவுக்கு முன் ஒரு பச்சை முட்டையை குடித்தால் என்னாகும் தெரியுமா?

நோய்த்தாக்கம் 

நோய்களுக்கு ஆளாகக்கூடியவர்கள். எல்லா விஷயங்களிலும் ஏதேனும் தீமை இருக்க வாய்ப்புண்டு. பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் அதில் விதிவிலக்கல்ல. இவர்கள் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகம். தூக்கமின்மை, தலைவலி, காய்ச்சல், இதய பிரச்சினைகள் குறித்து அடிக்கடி புகார் செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். 

சமூக நலன் 

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவ விரும்புவார்கள். மக்களின் சமத்துவம், நலனை விரும்பி சமூகப் பணிகளில் அதிக ஈடுபடுவார்கள். மற்றவர்களை தனக்கு மேலே கருதி உதவுபவர்கள் சிறந்தவர்கள். பிப்ரவரியில் பிறந்தவர்களும் அவ்வழியே தான் வாழ்கின்றனர். 

இதையும் படிங்க: கர்ப்பிணியின் முகம் பிரகாசமாக இருந்தால் கட்டாயம் பெண் குழந்தை தான் பிறக்குமா? உண்மை பின்னணி என்ன?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்