சென்னை KMC ! "மக்களுக்காக" .. குடும்பத்தையே விட்டுவிட்டு மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரியும் மருத்துவர்கள்!

By ezhil mozhiFirst Published Apr 10, 2020, 5:45 PM IST
Highlights


சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கிக்கொள்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து தந்துள்ளது
 

சென்னை KMC ! "மக்களுக்காக" .. குடும்பத்தையே விட்டுவிட்டு மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரியும் மருத்துவர்கள்! குவியும் பாராட்டு!


சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கிக்கொள்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து தந்துள்ளது. 

இரவு பகல் பாராமல் தன்னலமற்று, கொரோனாவால் பாதித்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரும் நம் கண் முன்னே  தெரியும் கடவுள் எனலாம்.



கடந்த 100 நாட்களில் இந்த உலகையே புரட்டிபோட்டு எடுக்கும் வைரஸ் கொரோனா. மனித குலத்திற்கு பெரும் இன்னலாக வந்து நிற்கும் கொரோனாவிடம் போராடி எப்படி வெல்லப்போகிறோமோ என்ற பயம் அனைவர் மத்தியிலும் உள்ளது. உலக நாடுகளில் பெரும் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவும் தற்போது இந்தியாவிடம் உதவி கேட்டு உள்ளது.

இப்படியொரு நிலையில், உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில்  கொரோனா பரவினால் அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்க கூட பயமாக இருக்கும். இப்படிஒரு இக்கட்டான சூழ்நிலையில் இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினந்தோறும் மக்கள் மடிவதை பார்த்து முன்னெச்சரிக்கையாக இந்தியா 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது .



இதற்காக மருத்துவர்களும்,செவிலியர்களும், தூய்மைப்பணியாளர்களும், காவலர்களும் இரவு பகல் பாராமல் தூக்கம் இல்லாமல் கொரோனா நோய் பரவலை தடுக்க மிகுந்த சிரமத்துடன் மக்களுக்காக வேலை செய்து வருகின்றனர்.

என்னதான் மருத்துவர் என்றாலும் கொரோனா பாதித்தவர்களுடன் இருந்து சிகிச்சை அளிக்கும் போதோ  அல்லது காற்று மூலமாக தொற்று ஏற்பட வாய்ப்பு  உள்ளது அல்லவா? இவ்வாறு வேலை செய்யும் நபர்கள்   அனைத்திற்கும் துணிந்து, தன்னலமற்று வேலை செய்து வருகிறார்கள்.



ஒவ்வொரு நாளும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து முடித்து விட்டு, வீடு திரும்பும் போது, அவர்கள்  மனதிற்குள் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ தன்னை கொரோனா தாக்கி இருக்குமோ.. இதனால் நம் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படலாமே என்ற பயம் இருக்கும். குடும்ப  உறுப்பினர்கள் யாரேனும் அன்பாக வந்து உணவு பரிமாறினால் கூட, அவர்களை தூரமாக நிற்க சொல்ல வேண்டிய சூழல்... வேலை முடித்து வரும் பொது.. ஆசையாக  குழந்தை ஓடோடி வந்தால் கூட தொட்டு தூக்கி  கொஞ்ச முடியாத நிலை..

இப்படி ஒரு மன அழுத்தத்தில் மக்களுக்காக பல வலிகளை தாங்கிக்கொண்டு, தினமும் வேலைக்கு செல்லும்  மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கிக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது அரசு. இது பாதுகாப்பானது என்றாலும், அவர்கள் குடும்பத்தை விட்டு விலகி  இருக்க வேண்டிய நேரமாக உள்ளது.



இப்படி மக்களுக்காக சேவையில் பலரும் பல வலியோடு வேலை செய்து வரும் தருணத்தில், பாதுகாப்பாய்  வீட்டில் இருங்கள் என்று சொன்னால் கூட கேட்காமல் பலரும் திமிர் பிடித்து அலைகின்றனர். அரசு  எவ்வளவோ முயற்சி செய்து கட்டுப்பாடு விதித்தும் திருந்தாத ஜென்மங்கள் தேவியில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் சென்று திரிவதும், அவர்கள் மட்டுமல்லால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே நமக்காக தன்னலமற்று வேலை செய்து வரும் மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என இவர்கள் அனைவரும் தான் உண்மையான ஹீரோக்கள் ஹீரோயின்கள்.



 

click me!